தானேயில் பணப்பிரச்சினையில் வளர்ப்பு தாய் கொலை ஆட்டோ டிரைவர் கைது


தானேயில் பணப்பிரச்சினையில் வளர்ப்பு தாய் கொலை ஆட்டோ டிரைவர் கைது
x
தினத்தந்தி 2 Jun 2020 6:15 AM IST (Updated: 2 Jun 2020 6:15 AM IST)
t-max-icont-min-icon

தானேயில் பணப்பிரச்சினையில் வளர்ப்பு தாயை கொலை செய்த ஆட்டோ டிரைவரை போலீசார் கைது செய்தனர்.

மும்பை,

தானே ரபோடி பகுதியில் கடந்த வெள்ளிக்கிழமை கழுத்தை அறுத்து கொலை செய்யப்பட்ட நிலையில் பெண் ஒருவரின் உடல் மீட்கப்பட்டது. போலீசார் நடத்திய விசாரணையில், அந்த பெண்ணின் பெயர் ரேஷ்மா என்பது தெரியவந்தது. மேலும் அந்த பகுதியில் இருந்த கண்காணிப்பு கேமராவில் பதிவாகி இருந்த காட்சிகளை ஆய்வு செய்த போது ரேஷ்மாவின் உடலை சிவாஜிநகர் பகுதியில் வசித்து வரும் அவரது வளர்ப்பு மகன் ஷான்நவாஸ் (24) போட்டு செல்வது தெரியவந்தது.

இதையடுத்து ஆட்டோ டிரைவரான ஷான்நவாசை போலீசார் பிடித்து விசாரித்தனர். அப்போது அவர் வளர்ப்பு தாய் ரேஷ்மாவை கொலை செய்ததை ஒப்புக்கொண்டார். மேலும் அவர் போலீசில் கூறியதாவது:-

ரேஷ்மா வெளிநாட்டு வேலைக்கு அனுப்பி வைப்பதாக கூறி ஷான்நவாசிடம் ரூ.96 ஆயிரம் வாங்கி உள்ளார். ஆனால் வேலைக்கு அனுப்பாமல், பணத்தை திருப்பி கொடுக்காமல் இருந்து உள்ளார். பணத்தை திருப்பி கேட்ட போது அவர் வாலிபரை துன்புறுத்தி உள்ளாா். இதனால் ஆத்திரமடைந்த அவர் சம்பவத்தன்று ரபோடி பகுதியில் ஆள்நடமாட்டம் இல்லாத பகுதிக்கு ஆட்டோவில் அழைத்து சென்று ரேஷ்மாவை கழுத்தை அறுத்து கொலை செய்தார். பின்னர் அவர் அணிந்து இருந்த தங்க நகைகளை கொள்ளையடித்துவிட்டு உடலை அங்கு வீசி சென்று உள்ளார். இந்த தகவல்களை ஷான்நவாஸ் போலீசாரிடம் கூறியுள்ளார்.

இதையடுத்து போலீசார் பணப்பிரச்சினையில் வளர்ப்பு தாயை கொலை செய்த ஆட்டோ டிரைவரை கைது செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

Next Story