மும்பையில் இன்று பலத்த மழைக்கு வாய்ப்பு நாளை மிக கனமழை எச்சரிக்கை
மும்பையில் இன்று பலத்த மழை பெய்ய வாய்ப்பு இருப்பதாகவும், நாளை மிக கனமழை பெய்ய வாய்ப்பு இருப்பதாகவும் வானிலை ஆய்வு மையம் எச்சரிக்கை விடுத்து உள்ளது.
மும்பை,
மும்பையில் அரபிக்கடலில் ஏற்பட்டுள்ள காற்றழுத்த தாழ்வு நிலை காரணமாக மழை பெய்ய வாய்ப்பு இருப்பதாக வானிலை ஆய்வு மையம் அறிவித்து இருந்தது. இந்தநிலையில் நேற்று அதிகாலை நேரத்தில் மும்பையின் ஒரு சில இடங்கள், தானே மற்றும் பால்கரிலும் லேசான மழை பெய்தது.
தாராவியில் பகுதியில் 24 மணி நேரத்தில் அதிகபட்சமாக 31.4 மி.மீ. அளவுக்கு மழை பதிவாகி இருந்தது. நேற்று முன்தினம் புனேயில் இடி மற்றும் பலத்த காற்றுடன் மழை பெய்தது.
இந்தநிலையில் அரபிக்கடலில் உருவாகி உள்ள காற்றழுத்த தாழ்வு நிலை நாளை (புதன்கிழமை) குஜராத், மராட்டியத்தை கடக்க உள்ளது. இதனால் இன்றும், நாளையும் பலத்த மழை பெய்யும் என கணிக்கப்பட்டு உள்ளது. இதுகுறித்து வானிலை ஆய்வு மையம் வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பில், “மும்பை, தானே, ராய்காட் மற்றும் பால்கரில் இன்று (செவ்வாய்க்கிழமை) பலத்த மழை பெய்ய வாய்ப்பு உள்ளது. நாளை இந்த பகுதிகளில் மிக கனமழை பெய்ய அதிக வாய்ப்பு உள்ளது. எனவே நாளைய தினம் ரெட் அலர்ட் விடுக்கப்பட்டு உள்ளது. இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.
இதற்கிடையே அடுத்த சில நாட்களுக்கு மீனவர்கள் கடலுக்குள் செல்ல வேண்டாம் என பால்கர் மாவட்ட கலெக்டர் கைலாஷ் ஷிண்டே வேண்டுகோள் விடுத்து உள்ளார்.

Related Tags :
Next Story