காதல் ஜோடி போலீசில் தஞ்சம்
வடமதுரையை அடுத்த செங்குறிச்சி அருகே காதல் ஜோடி போலீசில் தஞ்சம் அடைந்தனர்.
வடமதுரை,
வடமதுரையை அடுத்த செங்குறிச்சி அருகே உள்ள ஆலம்பட்டியை சேர்ந்தவர் சங்கிலி (வயது 22). கட்டிட தொழிலாளி. அதே பகுதியை சேர்ந்தவர் தனலட்சுமி (19). இவர் கூலிவேலை செய்து வருகிறார். இந்த நிலையில் இருவருக்கும் இடையே பழக்கம் ஏற்பட்டு காதலாக மாறியது. அவர்களின் காதலுக்கு பெற்றோர் எதிர்ப்பு தெரிவித்தனர். இதனால் காதலர்கள் இருவரும் வீட்டைவிட்டு வெளியேறி வடமதுரை அருகே உள்ள ஒரு கோவிலில் திருமணம் செய்தனர். பின்னர் பாதுகாப்பு கேட்டு வடமதுரை போலீசில் இருவரும் தஞ்சமடைந்தனர். அதையடுத்து போலீசார் அவர்கள் பெற்றோரை அழைத்து பேச்சுவார்த்தை நடத்தினர். அதில் உடன்பாடு ஏற்படவில்லை. இருப்பினும் மணமக்கள் இருவரும் மேஜர் என்பதால் அவர்கள் விருப்பப்படி வாழும்படி கூறி போலீசார் அனுப்பி வைத்தனர்.
Related Tags :
Next Story