புதுவை சட்டசபை விரைவில் கூடுகிறது
புதுவை சட்டசபையின் பட்ஜெட் கூட்டத்தொடர் ஆண்டுதோறும் மார்ச் மாதம் நடைபெறுவது வழக்கம்.
புதுச்சேரி,
கடந்த 8 ஆண்டுகளுக்கு மேலாக மார்ச் மாதம் இடைக்கால பட்ஜெட் தாக்கல் செய்யப்பட்டது. அதன் பின்னரே முழுமையான பட்ஜெட் தாக்கல் செய்யப்படுகிறது.
அந்த வரிசையில் கடந்த மார்ச் மாதம் 30-ந்தேதி மூன்று மாதத்துக்கான அரசின் செலவினத்துக்கான இடைக்கால பட்ஜெட் தாக்கல் செய்யப்பட்டது. இந்த மாதத்துடன் பட்ஜெட் தொகை செலவிடப்பட்டுவிடும். அடுத்த மாதத்துக்கான அரசின் செலவினத்துக்கு புதிதாக பட்ஜெட் போட வேண்டும். இதற்காக புதுவை சட்டசபை விரைவில் கூட உள்ளது.
முதல்-அமைச்சர் நாராயணசாமி முழு பட்ஜெட்டை தாக்கல் செய்ய உள்ளார். இது தொடர்பாக அனைத்து எம்.எல்.ஏ.க்களுக்கும் கடிதம் அனுப்பி ஆலோசனை கேட்டு உள்ளார். அந்த கடிதத்தில் பட்ஜெட், வளர்ச்சிப் பணிகள், கொரோனா தடுப்பு பணிகள் குறித்து ஆலோசனை வழங்குமாறு கூறியுள்ளார்.
Related Tags :
Next Story