மின்வாரிய தொழிற்சங்க கூட்டமைப்பினர் ஆர்ப்பாட்டம்
தர்மபுரி மேற்பார்வை பொறியாளர் அலுவலகம் முன்பு மின்வாரிய தொழிற்சங்க கூட்டமைப்பினர் ஆர்ப்பாட்டம் நடத்தினர்.
தர்மபுரி,
மின்வாரிய தொழிற்சங்கங்களின் கூட்டமைப்பு சார்பில் மின்வாரியத்தில் தனியார் மய நடவடிக்கைகளை கைவிடக்கோரி தர்மபுரி மேற்பார்வை பொறியாளர் அலுவலகம் முன்பு ஆர்ப்பாட்டம் நடைபெற்றது. இதில் கூட்டமைப்பின் நிர்வாகிகள் கலந்து கொண்டு கோரிக்கைகளை விளக்கி கோஷங்கள் எழுப்பினார்கள்.
மாநில மின்வாரியங்களை பிரிக்க கூடாது. மின்வாரியத்தை தனியாருக்கு தாரைவார்க்க கூடாது. மாநில அரசுகளின் உரிமைகளை மத்திய அரசு பறிக்கக்கூடாது. மின்சார சட்டதிருத்தத்தை வாபஸ்பெற வேண்டும். மாநில அரசால் விவசாயம், நெசவுதொழில் உள்ளிட்டவற்றிற்கு சமூக அக்கறையுடன் அளிக்கப்படும் மானிய திட்டங்களை முடக்கும் நடவடிக்கையை கைவிட வேண்டும் என்ற கோரிக்கைகளை வலியுறுத்தி கோஷங்கள் எழுப்பப்பட்டன.

Related Tags :
Next Story