ஸ்ரீவில்லிபுத்தூரில் குடிமராமத்து பணிகள் சந்திரபிரபா எம்.எல்.ஏ. தொடங்கி வைத்தார்


ஸ்ரீவில்லிபுத்தூரில் குடிமராமத்து பணிகள்  சந்திரபிரபா எம்.எல்.ஏ. தொடங்கி வைத்தார்
x
தினத்தந்தி 3 Jun 2020 8:22 AM IST (Updated: 3 Jun 2020 8:22 AM IST)
t-max-icont-min-icon

ஸ்ரீவில்லிபுத்தூரில் குடிமராமத்து பணிகளை ஸ்ரீவில்லிபுத்தூர் எம்.எல்.ஏ. சந்திரபிரபா பூமி பூஜை செய்து தொடங்கி வைத்தார்.

ஸ்ரீவில்லிபுத்தூர், 

மழை காலம் விரைவில் தொடங்க இருப்பதால் ஸ்ரீவில்லிபுத்தூர் தாலுகாவில் பொதுப்பணித்துறை கட்டுப்பாட்டில் உள்ள அனைத்து கண்மாய்களிலும் குடிமராமத்து பணிகளை மேற்கொள்ள பொதுப்பணித்துறை முடிவெடுத்துள்ளது. அதன்பேரில் முள்ளிக்குளம் பெரியகுளம் கண்மாய், விழுப்பனூர் கண்மாய் ஆகிய கண்மாய்களில் குடிமராமத்து பணிகள் தொடங்கப்பட்டது. தலா ரூ.35 லட்சம் வீதம் 2 கண்மாய்களுக்கும் சேர்த்து ரூ.70 லட்சம் ஒதுக்கீடு செய்யப்பட்டு பணிகள் நடைபெற உள்ளது. இந்த பணிகளை ஸ்ரீவில்லிபுத்தூர் எம்.எல்.ஏ. சந்திரபிரபா பூமி பூஜை செய்து தொடங்கி வைத்தார். இதில் நிலவள வங்கி தலைவர் முத்தையா, மாவட்ட ஊராட்சி தலைவர் வசந்தி மான்ராஜ், மாவட்ட கவுன்சிலர் கணேசன், கூட்டுறவு வங்கி துணைத்தலைவர் மணி உள்பட பலர் கலந்து கொண்டனர். கண்மாய்களில் குடிமராமத்து பணியை பொதுப்பணித்துறையினர் சம்பந்தப்பட்ட கண்மாய் பாசன விவசாயிகள் சங்கத்திடம் ஒப்படைத்துள்ளனர்.

Next Story