ஆட்டோ டிரைவரின் மனைவி விஷம் குடித்து தற்கொலை - சாவில் மர்மம் இருப்பதாக சகோதரி புகார்


ஆட்டோ டிரைவரின் மனைவி விஷம் குடித்து தற்கொலை - சாவில் மர்மம் இருப்பதாக சகோதரி புகார்
x
தினத்தந்தி 4 Jun 2020 5:39 AM IST (Updated: 4 Jun 2020 5:39 AM IST)
t-max-icont-min-icon

ஆட்டோ டிரைவரின் மனைவி விஷம் குடித்து தற்கொலை செய்து கொண்டார். ஆனால் தனது தங்கை சாவில் மர்மம் இருப்பதாக போலீசில் அவருடைய சகோதரி புகார் செய்து உள்ளார்.

கும்மிடிப்பூண்டி,

கும்மிடிப்பூண்டி அடுத்த ஆரம்பாக்கத்தில் உள்ள செக்குமேடு பகுதியில் வசித்து வருபவர் ராஜா (வயது 34). ஆட்டோ டிரைவர். இவருக்கும், ஹேமாவதி (30) என்பவருக்கும் திருமணமாகி 2 மகன்களும், ஒரு மகளும் உள்ளனர்.

இந்த நிலையில் நேற்று கொக்கு மருந்து (விஷம்) சாப்பிட்டு ஹேமாவதி தற்கொலை செய்து கொண்டதாக கூறப்படுகிறது. இது குறித்து ஹேமாவதியின் சகோதரி சுஜாதா (32) ஆரம்பாக்கம் போலீஸ் நிலையத்தில் புகார் அளித்தார்.

அதில், தனது தங்கை ஹேமாவதிக்கும் அவரது கணவர் ராஜாவுக்கும் இடையே குடும்ப பிரச்சினை காரணமாக அடிக்கடி சண்டை ஏற்பட்டு வந்ததாகவும், இந்த நிலையில் ஹேமாவதி விஷம் குடித்ததாக கூறப்படுவதால் அவரது சாவில் சந்தேகம் உள்ளதாகவும், அவரது கணவர் ராஜாவிடம் விசாரணை நடத்தி உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும் எனவும் கூறியுள்ளார்.

இது குறித்து கும்மிடிப்பூண்டி இன்ஸ்பெக்டர் வெங்கடாசலம் தலைமையில் ஆரம்பாக்கம் போலீசார் வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

Next Story