மாவட்ட செய்திகள்

இ-பாஸ் இல்லாதவர்களுக்கு அனுமதி மறுப்பு: முள்ளோடை எல்லையில் போலீசார் அதிரடி + "||" + Permission denied for non-e-passes: Police action at Mullodai border

இ-பாஸ் இல்லாதவர்களுக்கு அனுமதி மறுப்பு: முள்ளோடை எல்லையில் போலீசார் அதிரடி

இ-பாஸ் இல்லாதவர்களுக்கு அனுமதி மறுப்பு: முள்ளோடை எல்லையில் போலீசார் அதிரடி
புதுச்சேரி எல்லை பகுதியான முள்ளோடையில் தமிழக பகுதியில் இருந்து இ-பாஸ் இல்லாமல் வந்தவர்கள் அனுமதி மறுக்கப்பட்டனர். போலீசாரின் இந்த அதிரடி நடவடிக்கையால் அங்கு 3 கி.மீ. தூரத்துக்கு வாகனங்கள் அணிவகுத்து நின்றன.
பாகூர்,

புதுச்சேரியில் கடந்த சில நாட்களாக கொரோனாவால் பாதிக்கப்பட்டவர்களின் எண்ணிக்கை அதிகரித்துக் கொண்டே செல்கிறது. இதையொட்டி அரசு உத்தரவின்பேரில் மாநில எல்லையான பாகூர் அருகே முள்ளோடை சோதனை சாவடியில் போலீஸ் சூப்பிரண்டு ஜிந்தா கோதண்டராமன் தலைமையில் போலீசார் அதிரடி நடவடிக்கை மேற்கொண்டனர்.


அப்போது, கடலூரில் இருந்து புதுச்சேரிக்கு வந்த வாகனங்களை நிறுத்தி சோதனை நடத்தினர். இ-பாஸ் உள்ளவர்கள் மட்டுமே புதுச்சேரிக்குள் நுழைய அனுமதிக்கப்பட்டனர். மற்றவர்களை திருப்பி அனுப்பி வைத்ததால் பொதுமக்களுக்கும் - போலீசாருக்கும் கடும் வாக்குவாதம் ஏற்பட்டது. போலீசாரின் இந்த கெடுபிடியால் வாகனங்கள் நீண்ட நேரம் வரிசையில் நிறுத்தி வைக்கப்பட்டிருந்தன. நேரம் செல்ல, செல்ல முள்ளோடையில் இருந்து கடலூர் ஆல்பேட்டை வரை சுமார் 3 கி.மீ. தூரத்துக்கு வாகனங்கள் அணிவகுத்து நின்றன. இதனால் அந்த பகுதியில் போக்குவரத்து நெரிசல் ஏற்பட்டது.

இதற்கிடையே கடலூர் எல்லை பகுதியான கங்கனாங்குப்பம் சோதனைச் சாவடியில் புதுச்சேரியில் இருந்து செல்லும் வாகனங்களை கடலூர் போலீசார் தடுத்து நிறுத்தி சோதனை செய்து அனுப்புகிறார்கள். இது புதுச்சேரி போலீசாரின் நடவடிக்கைக்கு பதிலடி கொடுக்கவே செய்ததாக கூறப்படுகிறது.

இதுகுறித்து போலீஸ் அதிகாரி ஒருவர் கூறுகையில், ‘புதுச்சேரியில் கொரோனா பாதிப்பு நாளுக்கு நாள் அதிகரித்துக்கொண்டே செல்கிறது. அரசின் உத்தரவுப்படி எங்கள் பணியை செய்கிறோம். இ-பாஸ் வைத்திருப்பவர்களை மட்டுமே அனுமதிக்க வேண்டும் என்ற உத்தரவு உள்ளது. பொதுமக்கள் அது தெரியாமல் எங்களிடம் வாக்குவாதம் செய்து வருகின்றனர்’ என்றார். 

தொடர்புடைய செய்திகள்

1. திருவண்ணாமலை மாவட்ட எல்லைகளில் போலீசார் தீவிர கண்காணிப்பு இ-பாஸ் இல்லாத வாகனங்கள் திருப்பி அனுப்பப்பட்டன
திருவண்ணாமலை மாவட்ட எல்லைகளில் போலீசார் தீவிரமாக கண்காணித்து வருகின்றனர்.
2. இ-பாஸ் கட்டாயமாக்கப்பட்டதால் குளித்தலை சோதனை சாவடிகளில் போலீசார் தீவிர கண்காணிப்பு
இ-பாஸ் கட்டாயமாக்கப்பட்டுள்ளதால், குளித்தலை பகுதியில் சோதனை சாவடிகள் அமைத்து போலீசார் தீவிரமாக கண்காணித்து வருகின்றனர்.
3. கோவை மாவட்டத்திற்கு ‘இ-பாஸ் இல்லாமல் வருபவர்கள் கைது செய்யப்படுவார்கள்’ அதிகாரிகள் எச்சரிக்கை
கோவை மாவட்டத்திற்கு இ-பாஸ் இல்லாமல் வருபவர்கள் கைது செய்யப்படுவார்கள் என்று அதிகாரிகள் எச்சரித்துள்ளனர்.
4. சென்னையில் இருந்து திருப்பூருக்கு இ-பாஸ் பெறாமல் வாடகை காரில் வந்த 4 பேர் வீட்டில் தனிமைப்படுத்தப்பட்டு கண்காணிப்பு
சென்னையில் இருந்து திருப்பூருக்கு இ-பாஸ் பெறாமல் வாடகை காரில் வந்த 4 பேர் வீட்டில் தனிமைப்படுத்தப்பட்டு கண்காணிக்கப்பட்டு வருகிறார்கள்.
5. சென்னை, திருவள்ளூர், செங்கல்பட்டு தவிர்த்து அனைத்து மாவட்டங்களுக்கும் இ-பாஸ் இல்லாமல் சென்று வர அனுமதி உணவுப்பொருள் வியாபாரிகள் சங்கம் வலியுறுத்தல்
சென்னை, காஞ்சீபுரம், திருவள்ளூர், செங்கல்பட்டு ஆகிய மாவட்டங்களை தவிர்த்து அனைத்து மாவட்டங்களுக்கும் இ-பாஸ் இல்லாமல் சென்று வர அனுமதிக்க வேண்டும் என்று முதல்வரிடம் உணவுப்பொருள் வியாபாரிகள் சங்கம் கோரிக்கை வைத்துள்ளது.