குமரி மாவட்டத்தில் கருணாநிதி பிறந்த நாள் கொண்டாட்டம் எம்.எல்.ஏ.க்கள் சுரேஷ்ராஜன், ஆஸ்டின் பங்கேற்பு
குமரி மாவட்டத்தில் கருணாநிதி பிறந்த நாள் கொண்டாடப்பட்டது. விழாவில் எம்.எல்.ஏ.க்கள் சுரேஷ்ராஜன், ஆஸ்டின் ஆகியோர் கலந்து கொண்டனர்.
நாகர்கோவில்,
குமரி மாவட்டத்தில் கருணாநிதி பிறந்த நாள் கொண்டாடப்பட்டது. விழாவில் எம்.எல்.ஏ.க்கள் சுரேஷ்ராஜன், ஆஸ்டின் ஆகியோர் கலந்து கொண்டனர்.
கருணாநிதி பிறந்த நாள்
தமிழக முன்னாள் முதல்-அமைச்சர் மறைந்த கருணாநிதியின் பிறந்த நாள் விழா நேற்று குமரி மாவட்டம் முழுவதும் கொண்டாடப்பட்டது. குமரி கிழக்கு மாவட்ட தி.மு.க. சார்பில் நாகர்கோவிலில் உள்ள மாவட்ட தி.மு.க. அலுவலகத்தில் கருணாநிதி உருவப்படத்திற்கு மாலை அணிவித்து மரியாதை செலுத்தும் நிகழ்ச்சி நடந்தது. நிகழ்ச்சிக்கு மாவட்ட செயலாளர் சுரேஷ்ராஜன் எம்.எல்.ஏ. தலைமை தாங்கி கருணாநிதி உருவப்படத்துக்கு மாலை அணிவித்தும், மலர் தூவியும் மரியாதை செலுத்தினார். ஆஸ்டின் எம்.எல்.ஏ., மாவட்ட பொருளாளர் கேட்சன், மாநகரச் செயலாளர் மகேஷ், கலை இலக்கிய பகுத்தறிவு பேரவை செயலாளர் தில்லை செல்வம் உள்பட பலர் கலந்து கொண்டனர்.
இதைத் தொடர்ந்து வடசேரியில் கலை இலக்கிய பகுத்தறிவு பேரவை சார்பில் கருணாநிதி படத்திற்கு மரியாதை செலுத்தப்பட்டது. நிகழ்ச்சியில் எம்.எல்.ஏ.க்கள் சுரேஷ்ராஜன், ஆஸ்டின் மற்றும் பலர் கலந்து கொண்டனர்.
கன்னியாகுமரி
* கன்னியாகுமரி பேரூர் தி.மு.க. சார்பில் கருணாநிதி பிறந்த நாள் கொண்டாடப்பட்டது. இதையொட்டி கன்னியாகுமரி பழைய பஸ் நிலைய ரவுண்டானா சந்திப்பில் உள்ள அண்ணாவின் முழு உருவவெண்கல சிலை முன்பு கருணாநிதியின் உருவப்படம் மலர்களால் அலங்கரித்து வைக்கப்பட்டு இருந்தது. இதற்கு பேரூர் செயலாளர் குமரி ஸ்டீபன் தலைமை தாங்கினார். தி.மு.க. செயற்குழு உறுப்பினரும், அகஸ்தீஸ்வரம் தெற்கு ஒன்றிய தி.மு.க. செயலாளருமான என்.தாமரைபாரதி கலந்து கொண்டு கருணாநிதியின் உருவ படத்திற்கு மலர் மாலை அணிவித்து மரியாதை செலுத்தினார். பின்னர் அவர் கன்னியாகுமரி தற்காலிக சந்தையில் உள்ள வியாபாரிகள் மற்றும் பொதுமக்களுக்கு இனிப்புகள் மற்றும் முக கவசங்கள்,கிருமி நாசினிகளையும் வழங்கினார்.
* தமிழகத்தின் முன்னாள் முதல்-அமைச்சர் மறைந்த கருணாநிதியின் 97-வது பிறந்த நாள் விழா கன்னியாகுமரி சட்டமன்ற தொகுதிக்கு உட்பட்ட ஆத்திக்காட்டுவிளை ஊராட்சியில் நடந்தது. இதில் ஆஸ்டின் எம்.எல்.ஏ. கலந்து கொண்டு கருணாநிதி உருவப்படத்துக்கு மாலை அணிவித்து மரியாதை செலுத்தி, இனிப்பு வழங்கினார். இதில் ஒன்றிய தி.மு.க. செயலாளர் லிவிங்ஸ்டன், ஆத்திக்காட்டுவிளை ஊராட்சி தலைவர் விஜயா முத்துலிங்கம், ஜெயக்குமார், செல்வன், மிகஅன்பு, ஞானவினோ மற்றும் பலர் கலந்து கொண்டனர்.
நல உதவி
* நாகர்கோவில் ராமன்புதூர் ஜங்ஷனில் நடந்த விழாவுக்கு தி.மு.க. மாவட்ட சிறுபான்மை அணி துணை அமைப்பாளர் செல்வின் சுபாஷ் தலைமை தாங்கி, கருணாநிதியின் உருவப்படத்துக்கு மாலை அணிவித்து ஏழை-எளியவர்களுக்கு நல திட்ட உதவிகள் வழங்கினார். நிகழ்ச்சியில் மாவட்ட மாணவரணி துணை அமைப்பாளர் சந்திரசேகர், 36-வது வார்டு இளைஞரணி செயலாளர் கணேஷ்குமார், முத்துராஜன், விஜி உள்பட பலர் கலந்து கொண்டனர்.
* பூதப்பாண்டியை அடுத்த திடல் ஊராட்சி பகுதியில் உள்ள இரவிபுதூர் கிராமத்தில் கருணாநிதியின் பிறந்த நாள் விழா மற்றும் நிவாரண பொருட்கள் வழங்கும் நிகழ்ச்சி நடந்தது. இதில் தி.மு.க. மாவட்ட இளைஞர் அணி துணை அமைப்பாளர் பூதலிங்கம் கலந்து கொண்டு நிவாரண பொருட்களை வழங்கினார்.
Related Tags :
Next Story