அரசாணை வரவில்லை என அதிகாரிகள் கைவிரிப்பு: ரூ.2 ஆயிரம் நிவாரண தொகை பெற முடியாமல் தவிக்கும் முடி திருத்தும் தொழிலாளர்கள்


அரசாணை வரவில்லை என அதிகாரிகள் கைவிரிப்பு: ரூ.2 ஆயிரம் நிவாரண தொகை பெற முடியாமல் தவிக்கும் முடி திருத்தும் தொழிலாளர்கள்
x
தினத்தந்தி 4 Jun 2020 8:44 AM IST (Updated: 4 Jun 2020 8:44 AM IST)
t-max-icont-min-icon

அரசாணை வரவில்லை என அதிகாரிகள் கைவிரித்து விட்டதால் முடி திருத்தும் தொழிலாளர்கள் ரூ.2 ஆயிரம் நிவாரண தொகை பெற முடியாமல் தவித்து வருகிறார்கள்.

திருச்சி, 

அரசாணை வரவில்லை என அதிகாரிகள் கைவிரித்து விட்டதால் முடி திருத்தும் தொழிலாளர்கள் ரூ.2 ஆயிரம் நிவாரண தொகை பெற முடியாமல் தவித்துவருகிறார்கள்.

ரூ.2 ஆயிரம் நிவாரணம்

கொரோனாவிற்காக பிறப்பிக்கப்பட்ட ஊரடங்கு உத்தரவின்காரணமாக தமிழகம் முழுவதும் சலூன் கடைகளும் மூடப்பட்டன. சுமார் 2 மாதமாக சலூன் கடைகள் மூடப்பட்டதால் முடி திருத்தும் தொழிலாளர்கள் தங்கள் வாழ்வாதாரத்தை இழந்ததால் பல்வேறு அறவழி போராட்டங்களை நடத்தினார்கள்.

இதனை தொடர்ந்து முதலில் கிராம புறங்களிலும் பின்னர் நகர பகுதிகளிலும் முடி திருத்தும் நிலையங்களை திறக்க தமிழக அரசு அனுமதி வழங்கியது. இதற்கிடையில் தமிழக அரசின் வருவாய் நிர்வாக ஆணையர் ராதாகிருஷ்ணன் நல வாரியத்தில் உறுப்பினர்களாக பதிவு செய்துள்ள முடி திருத்தும் தொழிலாளர்களுக்கு ரூ.2 ஆயிரம் நிவாரண தொகை வழங்கப்பட்டதை போன்று நல வாரியத்தில் பதிவு செய்யாத முடி திருத்தும் தொழிலாளர்களுக்கும் ரூ.2 ஆயிரம் வழங்க உத்தரவிடப்பட்டு உள்ளது என கூறினார். இதற்கான பட்டியலை ஒவ்வொரு மாவட்டத்திலும் கிராம நிர்வாக அதிகாரிகள் தயாரித்து அரசுக்கு அனுப்பவேண்டும் எனவும் அறிவித்தார். இதற்கான அரசாணையும் பிறப்பிக்கப்பட்டது.

கிடைக்காமல் தவிப்பு

இந்த அரசாணையின் அடிப்படையில் திருச்சி மாவட்டத்தில் நல வாரியத்தில் உறுப்பினராக பதிவு செய்யாத முடி திருத்தும் தொழிலாளர்களின் பெயர் விவரங்கள் அடங்கிய பட்டியல் இதுவரை தயாரிக்கப்படவில்லை. இதுபற்றி முடி திருத்தும் தொழிலாளர்கள் நல சங்க மாவட்ட செயலாளர் தருமலிங்கம் தாலுகா அலுவலகங்களில் விசாரித்த போது அதிகாரிகள் எங்களுக்கு இதுவரை அரசாணை வரவில்லை என கூறிவிட்டனர். இதனால் திருச்சி மாவட்டத்தில் சுமார் 10 ஆயிரம் முடி திருத்தும் தொழிலாளர்கள் நிவாரண தொகை பெற முடியாமல் தவித்து வருகிறார்கள்.

Next Story