திருச்சி- செங்கல்பட்டு இடையே 2 அதிவிரைவு சிறப்பு ரெயில் ரெயில்வே வாரியம் அனுமதி கிடைத்ததும் இயக்க திட்டம்
திருச்சி- செங்கல்பட்டு இடையே 2 அதிவிரைவு சிறப்பு ரெயில்களை ரெயில்வே வாரியம் அனுமதி கிடைத்ததும் இயக்க தெற்கு ரெயில்வே திட்டமிட்டு உள்ளது.
திருச்சி,
திருச்சி- செங்கல்பட்டு இடையே 2 அதிவிரைவு சிறப்பு ரெயில்களை ரெயில்வே வாரியம் அனுமதி கிடைத்ததும் இயக்க தெற்கு ரெயில்வே திட்டமிட்டு உள்ளது.
3 வழித்தடங்களில் சிறப்பு ரெயில்
கொரோனா வைரஸ் பரவலை தடுப்பதற்காக பிறப்பிக்கப்பட்ட ஊரடங்கில் அளிக்கப்பட்ட தளர்வினை தொடர்ந்து தமிழகத்தில் 4 வழித்தடங்களில் அதி விரைவு சிறப்பு ரெயில்களை தெற்கு ரெயில்வே கடந்த 1-ந்தேதியில் இருந்து இயக்கி வருகிறது. இது தவிர தமிழகத்தில் மேலும் 3 வழித்தடங்களில் அதிவிரைவு சிறப்பு ரெயில்களை இயக்கவேண்டும் என தமிழக அரசு சார்பில் தெற்கு ரெயில்வே பொது மேலாளருக்கு கோரிக்கை வைக்கப்பட்டு உள்ளது. இந்த கோரிக்கையின் அடிப்படையில் திருச்சி- செங்கல்பட்டு இடையே அரியலூர் வழியாக ஒரு சிறப்பு ரெயிலையும், திருச்சி- செங்கல்பட்டு இடையே தஞ்சாவூர் வழியாக ஒரு சிறப்பு ரெயிலையும், கோவை- அரக்கோணம் இடையே இன்னொரு சிறப்பு ரெயிலையும் இயக்குவதற்கு அனுமதி வழங்கும்படி தெற்கு ரெயில்வே சார்பில் ரெயில்வே வாரியத்திற்கு கடிதம் அனுப்பப்பட்டு உள்ளது.
திருச்சி- செங்கல்பட்டு
திருச்சியில் இருந்து காலை 7 மணிக்கு புறப்படும் சிறப்பு ரெயில் அரியலூர் (8.10) விழுப்புரம் (9.45), மேல் மருவத்தூர் (10.40) வழியாக 11.40 மணிக்கு செங்கல்பட்டை சென்றடையும். மறு மார்க்கத்தில் இந்த ரெயில் செங்கல் பட்டில் இருந்து மாலை 4.45 மணிக்கு புறப்பட்டு மேல் மருவத்தூர் (5.05), விழுப்புரம் (6.10) அரியலூர் (7.40), வழியாக இரவு 9.05 மணிக்கு திருச்சி ஜங்ஷன் ரெயில் நிலையத்திற்கு வந்து சேரும்.
தஞ்சாவூர் வழியாக...
இன்னொரு சிறப்பு ரெயில் திருச்சியில் இருந்து காலை 6.30 மணிக்கு புறப்பட்டு தஞ்சாவூர் (7.15), கும்பகோணம் (7.50), மயிலாடுதுறை (8.22), திருப்பாதிரிபுலியூர் (9.45), விழுப்புரம் (10.50), மேல் மருவத்தூர் (11.48) வழியாக மதியம் 12.40 மணிக்கு செங்கல் பட்டிற்கு செல்லும். மறு மார்க்கத்தில் இந்த ரெயில் செங்கல் பட்டில் இருந்து பிற்பகல் 2 மணிக்கு புறப்பட்டு இதே வழியாக இரவு 10.10 மணிக்கு திருச்சி ஜங்ஷன் ரெயில் நிலையத்திற்கு வரும்.
இந்த ரெயில்கள் இயக்கத்திற்கான தேதி விரைவில் அறிவிக்கப்படும் என எதிர்பார்க்கப்படுகிறது.
Related Tags :
Next Story