பாம்பன் கடல்நீர் நிறம் மாறியது


பாம்பன் கடல்நீர் நிறம் மாறியது
x
தினத்தந்தி 4 Jun 2020 10:38 AM IST (Updated: 4 Jun 2020 10:38 AM IST)
t-max-icont-min-icon

பாம்பன் பகுதியில் கடந்த சில நாட்களாக வீசி வரும் பலத்த சூறாவளி காற்றால் கடல்நீர் நிறமாறி காட்சி அளிக்கிறது.

ராமேசுவரம், 

ராமேசுவரம், பாம்பன், தனுஷ்கோடி பகுதியில் கடந்த 4 நாட்களுக்கு மேலாக வழக்கத்திற்கு மாறாக பலத்த சூறை காற்று வீசி வருகிறது. இதனால் தனுஷ்கோடி, பாம்பன் உள்ளிட்ட தென்கடலான மன்னார் வளைகுடா கடல் பகுதி கொந்தளிப்பாக காணப்படுகிறது. இந்த நிலையில் பாம்பன் பகுதியில் கடந்த சில நாட்களாக வீசி வரும் பலத்த சூறாவளி காற்றால் கடல்நீர் நிறமாறி காட்சி அளிக்கிறது. காற்றின் வேகம், கடல் அலைகளின் வேகத்தால் கடலின் அடியில் உள்ள பாசி, தாழை செடிகள் கடலின் மேல்பகுதிக்கு வந்துள்ளதுடன் கடல்நீர் நிறம் மாறி உள்ளது. அதிலும் ரெயில் பாலம் பகுதியில் இருந்து சுமார் 500 மீட்டர் தூரம் வரையிலான வடக்கு கடல் பகுதி நிறம் மாறி காட்சி அளிப்பது குறிப்பிடத்தக்கது.

Next Story