வேலாயுதம்பாளையத்தில் இருந்து பீகார் தொழிலாளர்கள் 119 பேர் சொந்த ஊருக்கு அனுப்பிவைப்பு


வேலாயுதம்பாளையத்தில் இருந்து பீகார் தொழிலாளர்கள் 119 பேர் சொந்த ஊருக்கு அனுப்பிவைப்பு
x
தினத்தந்தி 4 Jun 2020 10:54 AM IST (Updated: 4 Jun 2020 10:54 AM IST)
t-max-icont-min-icon

வேலாயுதம்பாளையத்தில் இருந்து பீகார் மாநில தொழிலாளர்கள் 119 பேர், சொந்த ஊருக்கு அனுப்பி வைக்கப்பட்டனர்.

வேலாயுதம்பாளையம், 

வேலாயுதம்பாளையத்தில் இருந்து பீகார் மாநில தொழிலாளர்கள் 119 பேர், சொந்த ஊருக்கு அனுப்பி வைக்கப்பட்டனர்.

ஊரடங்கு

கொரோனா வைரஸ் தொற்று பரவலை தடுக்க நாடு முழுவதும் பிறப்பிக்கப்பட்டுள்ள ஊரடங்கு 5-வது முறையாக நீட்டிக்கப்பட்டுள்ளது. இதையடுத்து தமிழகத்தில் உள்ள பிற மாநிலங்களை சேர்ந்த தொழிலாளர்களை அவர்களது சொந்த மாநிலங்களுக்கு அனுப்பி வைக்க மத்திய, மாநில அரசுகள் நடவடிக்கை எடுத்து வருகின்றன.

அதன்படி, கரூர் மாவட்டத்தில் உள்ள பிறமாநில தொழிலாளர்களில், சொந்த ஊருக்கு செல்ல விருப்பம் உள்ளவர்கள், சிறப்பு ரெயில்கள் மூலம் அனுப்பி வைக்கப்பட்டு வருகின்றனர்.

பீகார் மாநில தொழிலாளர்கள்

இதன்படி நேற்று கரூர் உள்பட மாவட்டத்தின் பல்வேறு பகுதிகளில் வேலை பார்த்து வந்த 119 பீகார் மாநில தொழிலாளர்கள், வேலாயுதம்பாளையத்தில் உள்ள மேம்பாலத்தின் கீழ் பகுதிக்கு அழைத்து வரப்பட்டனர். அங்கு அவர்களுக்கு உணவுகள் வழங்கப்பட்டது. அதன் பின்னர் அனைவருக்கும் முக கவசம் வழங்கப்பட்டு, சமூக இடைவெளியை கடைபிடித்து 3 பஸ்களில் அமரவைக்கப்பட்டனர். அப்போது அவர்களிடம் கொரோனா வைரஸ் தொற்றில் இருந்து தற்காத்து கொள்வதற்கான வழிமுறைகள் குறித்து எடுத்து கூறப்பட்டது. இதையடுத்து வேலாயுதம்பாளையத்தில் இருந்து 3 பஸ்கள் மூலம் பீகார் மாநில தொழிலாளர்கள் 119 பேரை, சேலம் ரெயில் நிலையத்திற்கு மாவட்ட வருவாய் அதிகாரி ராஜேந்திரன் வழியனுப்பி வைத்தார். நிகழ்ச்சியில் மாவட்ட பிற்படுத்தப்பட்டோர் மற்றும் சிறுபான்மை நல அலுவலர் ரெங்கராஜன், கரூர் கோட்டாட்சியர் சந்தியா, தாசில்தார்கள், வருவாய்த்துறை அலுவலர்கள் உள்பட பலர் கலந்துகொண்டனர். பீகார் மாநில தொழிலாளர்கள் சேலம் ரெயில் நிலையத்திற்கு சென்ற பின், அங்கிருந்து சிறப்பு ரெயில் மூலம் சொந்த ஊருக்கு புறப்பட்டு சென்றனர்.

Next Story