“எஸ்.எஸ்.எல்.சி. மாணவர்கள் அனைவரும் தேர்ச்சி பெற்றதாக அறிவிக்க வேண்டும்” திருநாவுக்கரசர் எம்.பி. வலியுறுத்தல்
“எஸ்.எஸ்.எல்.சி. மாணவர்கள் அனைவரும் தேர்ச்சி பெற்றதாக அறிவிக்க வேண்டும்“ என்று திருநாவுக்கரசர் எம்.பி. வலியுறுத்தினார்.
தென்காசி,
தென்காசி அருகே உள்ள மேலகரம் பஸ்நிறுத்தம் பகுதி மற்றும் இலஞ்சி ஆர்.பி. மேல்நிலைப்பள்ளி முன்பு ஆகிய இடங்களில் காங்கிரஸ் கட்சி சார்பில் ஏழை மக்களுக்கு கொரோனா நிவாரணமாக இலவச அரிசி வழங்கும் நிகழ்ச்சி நேற்று நடந்தது. இதில் தமிழ்நாடு காங்கிரஸ் முன்னாள் தலைவர் திருநாவுக்கரசர் எம்.பி. கலந்து கொண்டு, நூற்றுக்கணக்கானோருக்கு இலவச அரிசியை வழங்கினார்.
பின்னர் அவர் நிருபர்களிடம் கூறியதாவது:- கொரோனாவால் இந்திய மக்கள் மட்டுமல்ல, உலகம் முழுவதும் பல்வேறு தரப்பு மக்களும் பாதிக்கப்பட்டு உள்ளனர். இது தேசிய பேரிடராக அறிவிக்கப்பட்டு உள்ளது. பாதிக்கப்பட்ட மக்களுக்கு அரசியல் கட்சியினர் பல்வேறு நிவாரண உதவிகளை வழங்கி வருகிறார்கள். ஆனால், மாநில அரசை பொறுத்தவரை ரூ.1,000 மட்டுமே வழங்கி உள்ளது. இதனை உயர்த்தி ரூ.7 ஆயிரத்து 500 ஆக வழங்க வேண்டும். தமிழ்நாட்டில் 2 கோடி ரேஷன் கார்டுகள் உள்ளன. இதற்கு மொத்த செலவு ரூ.15 ஆயிரம் கோடி தான் ஆகும். அரசுக்கு வருமானம் ரூ.2 லட்சம் கோடி வருகிறது. இதேபோல் மத்திய அரசு ஒவ்வொரு ரேஷன் கார்டுக்கும் ரூ.7,500 வழங்க வேண்டும்.
ரூ.20 லட்சம் கோடி திட்டம் என்று கூறுகிறார்கள். அந்த திட்டம் மக்களுக்கு வந்து சேர அதிக நாட்கள் ஆகும். எனவே, ரூ.1 லட்சம் கோடி மட்டும் தற்போது பொதுமக்களுக்கு வழங்க வேண்டும். 100 நாள் வேலை திட்டத்தை 200 நாளாக உயர்த்தி, சம்பளத்தையும் இரு மடங்காக உயர்த்த வேண்டும்.
எஸ்.எஸ்.எல்.சி. தேர்வை ஏன் அவசரமாக நடத்த வேண்டும்? ஒன்று அதனை தள்ளி வையுங்கள் அல்லது அனைத்து மாணவர்களும் வெற்றி பெற்றதாக அறிவியுங்கள். எஸ்.எஸ்.எல்.சி. தேர்வு முடிந்து 11, 12-ம் வகுப்புகள் படித்து தான் கல்லூரிக்கு செல்ல முடியும். எனவே, அனைவரும் தேர்ச்சி பெற்றதாக அறிவிக்க வேண்டும். இவ்வாறு அவர் கூறினார்.
நிகழ்ச்சியில், மாவட்ட தலைவர் பழனி நாடார், நெல்லை மாநகர் மாவட்ட தலைவர் சங்கரபாண்டியன் உள்பட பலர் கலந்து கொண்டனர்.
கடையம் அருகே உள்ள செல்லபிள்ளையார்குளத்தை சேர்ந்தவர் அழகுதுரை என்ற அருணாச்சலம். இவர் நெல்லை கிழக்கு மாவட்ட காங்கிரஸ் தலைவராக (கலைப்பிரிவு) உள்ளார். இவருடைய தாயார் செல்லம்மாள் கடந்த மாதம் 27-ந்தேதி உடல்நலக்குறைவால் இறந்தார். இந்த நிலையில் திருநாவுக்கரசர் எம்.பி., அழகுதுரையின் வீட்டுக்கு வந்து செல்லம்மாள் உருவப்படத்துக்கு மாலை அணிவித்து அஞ்சலி செலுத்தினார். மேலும் அவரது குடும்பத்தினருக்கு ஆறுதல் கூறினார். அப்போது மாவட்ட துணைத்தலைவர் லட்சுமணயாதவ் உள்ளிட்டோர் உடன் இருந்தனர்.

Related Tags :
Next Story