செங்கல்பட்டு மாவட்டத்தில் ஒரே நாளில் 169 பேருக்கு கொரோனா உறுதி - 6 நாளில் 537 பேர் பாதிப்பு
செங்கல்பட்டு மாவட்டத்தில் நேற்று ஒரே நாளில் 169 பேருக்கு கொரோனா வைரஸ் தொற்று உறுதியானது. கடந்த 6 நாட்களில் மட்டும் 537 பேர் கொரோனாவால் பாதிக்கப்பட்டுள்ளனர்.
வண்டலூர்,
செங்கல்பட்டு மாவட்டம் காரணைப்புதுச்சேரி ஊராட்சியில் உள்ள விநாயகபுரம் பகுதியை சேர்ந்த 54 வயது ஆண், கூடுவாஞ்சேரி பாலாஜி தெருவில் வசிக்கும் 35 வயது ஆண் ஆகிய இருவருக்கும் நேற்று கொரோனா வைரஸ் தொற்று உறுதி செய்யப்பட்டது. இவர்களது குடும்பத்தில் உள்ள உறுப்பினர்களுக்கும், அக்கம் பக்கத்தில் குடியிருக்கும் நபர்களுக்கும் கொரோனா வைரஸ் பரிசோதனைகளை டாக்டர்கள் செய்தனர்.
இவர்களுடன் செங்கல்பட்டு மாவட்டத்தில் நேற்று ஒரே நாளில் 169 பேர் கொரோனாவால் பாதிக்கப்பட்டு உள்ளனர். நேற்று முன்தினம் வெளிநாடுகளில் இருந்து வந்தவர்களில் கொரோனா வைரஸ் தொற்று பாதிக்கப்பட்டவர்களுடன் சேர்த்து மாவட்டம் முழுவதும் பாதிக்கப்பட்டோரின் எண்ணிக்கை 1,537 ஆனது.
இவர்களில் 678 பேர் சிகிச்சை பெற்று வீடு திரும்பினர். நேற்று 46 வயது பெண் ஒருவர் சிகிச்சை பலனின்றி உயிரிழந்தார். இத்துடன் 14 பேர் உயிரிழந்துள்ளனர். மற்றவர்கள் ஆஸ்பத்திரியில் சிகிச்சை பெற்று வருகின்றனர்.
செங்கல்பட்டு மாவட்டத்தில் கொரோனா வைரஸ் தொற்றின் தாக்கம் நாளுக்கு நாள் வேகமாக அதிகரித்து வருகிறது. கடந்த 29ந் தேதி மாவட்டம் முழுவதும் கொரோனாவால் பாதிக்கப்பட்டோரின் எண்ணிக்கை ஆயிரமாக இருந்தது. அதன் பிறகு மின்னல் வேகத்தில் கொரோனா வைரஸ் தொற்று பரவியதால் கடந்த 6 நாட்களில் மேலும் 537 பேர் பாதிக்கப்பட்டு உள்ளனர் என்பது குறிப்பிடத்தக்கது.
காஞ்சீபுரம் மாவட்டத்தில் நேற்று 8 பேர் கொரோனாவால் பாதிக்கப்பட்டனர். மாவட்டம் முழுவதும் பாதிக்கப்பட்டோரின் எண்ணிக்கை 465 ஆனது. இவர்களில் 292 பேர் சிகிச்சை முடிந்து வீடு திரும்பினர். 3 பேர் உயிரிழந்தனர். 170 பேர் தொடர்ந்து சிகிச்சை பெற்று வருகின்றனர்.
திருவள்ளூர் மாவட்டத்தில் நேற்று 44 பேர் கொரோனாவால் பாதிக்கப்பட்டனர். மாவட்டம் முழுவதும் பாதிக்கப்பட்டோரின் எண்ணிக்கை 1,124 ஆனது. இவர்களில் 645 பேர் சிகிச்சை முடிந்து வீடு திரும்பினர். 11 பேர் உயிரிழந்தனர். 468 பேர் தொடர்ந்து சிகிச்சை பெற்று வருகின்றனர்.

Related Tags :
Next Story