விவசாய தொழிலாளர் சங்கத்தினர் ஆர்ப்பாட்டம்


விவசாய தொழிலாளர் சங்கத்தினர் ஆர்ப்பாட்டம்
x
தினத்தந்தி 5 Jun 2020 5:58 AM IST (Updated: 5 Jun 2020 5:58 AM IST)
t-max-icont-min-icon

பல்வேறு கோரிக்கைகளை வலியுறுத்தி விவசாய தொழிலாளர் சங்கம் சார்பில் பழனி ஊராட்சி ஒன்றிய அலுவலகம் முன்பு ஆர்ப்பாட்டம் நடைபெற்றது.

பழனி, 

அகில இந்திய விவசாய தொழிலாளர் சங்கம் சார்பில் பழனி ஊராட்சி ஒன்றிய அலுவலகம் முன்பு ஆர்ப்பாட்டம் நடைபெற்றது. இதில் கொரோனா வைரஸ் அச்சுறுத்தல் மற்றும் ஊரடங்கால் பாதிக்கப்பட்ட தொழிலாளர்களின் குடும்பத்திற்கு தலா ரூ.7,500 வீதம் 3 மாதங்களுக்கு நிவாரணம் வழங்க வேண்டும். தேசிய ஊரக வேலை உறுதியளிப்பு திட்டத்தில் 200 நாட்கள் பணி வழங்க வேண்டும். இந்த பணிக்கு நாள் ஒன்றுக்கு ரூ.600 சம்பளம் வழங்க வேண்டும் என்பது உள்பட பல்வேறு கோரிக்கைகளை வலியுறுத்தி கோஷமிட்டனர். இந்த ஆர்ப்பாட்டத்தில் விவசாயிகள் பலர் கலந்துகொண்டனர். இதேபோல் தொப்பம்பட்டி ஒன்றிய அலுவலகத்திலும் விவசாய தொழிலாளர்கள் சங்கம் சார்பில் ஆர்ப்பாட்டம் நடைபெற்றது.

சாணார்பட்டி ஊராட்சி ஒன்றிய அலுவலகம் முன்பு ஆர்ப்பாட்டம் நடந்தது. இதற்கு ஒன்றிய செயலாளர் சரவணகோபால் தலைமை தாங்கினார். மாவட்ட செயலாளர் பெருமாள் முன்னிலை வகித்தார். இதில் சாணார்பட்டி மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்டு கட்சியின் ஒன்றிய செயலாளர் வெள்ளைக்கண்ணன், மாதர் சங்க செயலாளர் பாப்பாத்தி மற்றும் விவசாயிகள் கலந்துகொண்டனர்.

Next Story