மாவட்ட செய்திகள்

காரைக்கால், புதுச்சேரியில் இருந்து 1,119 புலம்பெயர்ந்த தொழிலாளர்கள் மேற்கு வங்காளம், அசாமுக்கு புறப்பட்டனர் + "||" + 1119 migrant workers leave Karaikal, Puducherry to Assam West, Bengal

காரைக்கால், புதுச்சேரியில் இருந்து 1,119 புலம்பெயர்ந்த தொழிலாளர்கள் மேற்கு வங்காளம், அசாமுக்கு புறப்பட்டனர்

காரைக்கால், புதுச்சேரியில் இருந்து 1,119 புலம்பெயர்ந்த தொழிலாளர்கள் மேற்கு வங்காளம், அசாமுக்கு புறப்பட்டனர்
புதுச்சேரி, காரைக்காலைச் சேர்ந்த புலம் பெயர்ந்த தொழிலாளர்கள் 1,119 பேர் சிறப்பு ரெயில் மூலம் மேற்கு வங்காளம், அசாமுக்கு புறப்பட்டுச் சென்றனர். அவர்களை முதல்-அமைச்சர் நாராயணசாமி வழியனுப்பி வைத்தார்.
புதுச்சேரி,

நாடு முழுவதும் ஊரடங்கு உத்தரவு அமலில் இருக்கும் நிலையில் புலம்பெயர்ந்த தொழிலாளர்களை சொந்த மாநிலங்களுக்கு அழைத்துச் செல்ல சிறப்பு ரெயில்கள் இயக்கப்பட்டு வருகின்றன. இதன்படி புதுச்சேரியில் இருந்து கடந்த மாதம் 18-ந் தேதி பீகார் மற்றும் உத்தரப்பிரதேசத்துக்கு சிறப்பு ரெயில் இயக்கப்பட்டது. இந்த ரெயிலில் 1,200 பேர் புறப்பட்டுச் சென்றனர். கடந்த வாரம் ஒடிசா மாநிலத்துக்கு மேலும் ஒரு சிறப்பு ரெயில் இயக்கப்பட்டது. இந்த ரெயிலில் 1,500 பேர் சென்றனர்.


இந்த நிலையில் காரைக்காலில் இருந்து புதுச்சேரி வழியாக மேற்கு வங்காளத்துக்கு சிறப்பு ரெயில் நேற்று மாலை 3 மணிக்கு இயக்கப்பட்டது. அங்கிருந்து மேற்கு வங்காளம், அசாமைச் சேர்ந்த 291 புலம்பெயர்ந்த தொழிலாளர்கள் புறப்பட்டனர். ரெயிலை மாவட்ட கலெக்டர் அர்ஜூன் சர்மா கொடியசைத்து வழியனுப்பினார். இதில் மாவட்ட சீனியர் போலீஸ் சூப்பிரண்டு மகேஷ்குமார் பன்வால், துணை கலெக்டர்கள் ஆதர்ஷ், பாஸ்கரன் உள்ளிட்ட பலர் கலந்துகொண்டனர். முன்னதாக அனைத்து தொழிலாளர்களுக்கும் கொரோனா பரிசோதனை செய்யப்பட்டு உணவு, தண்ணீர் வழங்கப்பட்டது.

இந்த ரெயிலில் அனுப்பி வைப்பதற்காக புதுவையில் பல்வேறு பகுதிகளில் வசித்து வந்த மேற்கு வங்காளத்தை சேர்ந்தவர்கள் அரசின் சாலை போக்குவரத்து கழக பஸ்கள் மூலம் உப்பளம் மைதானத்திற்கு அழைத்து வரப்பட்டனர். அங்கு அவர்களுக்கு மருத்துவ பரிசோதனை செய்யப்பட்டு உணவு, தண்ணீர் பாட்டில்கள் வழங்கப்பட்டன. மாலையில் அவர்கள் பஸ் மூலமாக ரெயில் நிலையத்திற்கு அழைத்து வரப்பட்டனர். காரைக்காலில் இருந்து நேற்று இரவு 8மணிக்கு இந்த ரெயில் புதுவை ரெயில் நிலையத்துக்கு வந்தது.

சிறப்பு ரெயிலை இரவு 9மணி அளவில் முதல்- அமைச்சர் நாராயணசாமி கொடி அசைத்து வழியனுப்பி வைத்தார். அவருடன் அமைச்சர் கந்தசாமி, ஜெயமூர்த்தி எம்.எல்.ஏ., மாவட்ட கலெக்டர் அருண், போலீஸ் டி.ஜி.பி. பாலாஜி ஸ்ரீவஸ்தவா, அரசு செயலர் (தொழிலாளர்) வல்லவன், உதவி கலெக்டர் அஸ்வின் சந்துரு, துணை கலெக்டர்கள் சுதாகர், சக்திவேல், தமிழ்ச்செல்வன், சீனியர் போலீஸ் சூப்பிரண்டு ராகுல் அல்வால் மற்றும் அதிகாரிகள் பலர் உடனிருந்தனர்.

இந்த ரெயிலில் காரைக்காலில் இருந்து 291 பேர் புதுச்சேரியில் இருந்து 828 பேர் என மொத்தம் 1,119 பேர் மேற்கு வங்காளத்துக்குஅனுப்பி வைக்கப்பட்டனர்.

தொடர்புடைய செய்திகள்

1. விக்கிரவாண்டியில் தங்கியிருந்த சத்தீஸ்கர் மாநில தொழிலாளர்கள் சொந்த ஊருக்கு அனுப்பி வைப்பு
விக்கிரவாண்டியில் உள்ள தனியார் உர தொழிற்சாலையில் சத்தீஸ்கர் மாநிலத்தை சேர்ந்த தொழிலாளர்கள் 31 பேர் பணியாற்றி வந்தனர்.
2. ஈரோடு மாவட்டத்தில் இருந்து சொந்த ஊர் செல்ல காத்திருக்கும் ஜார்கண்ட் மாநில தொழிலாளர்கள்
ஈரோடு மாவட்டத்தில் இருந்து சொந்தஊர் செல்வதற்காக காத்திருந்த ஜார்கண்ட் மாநில தொழிலாளர்களுக்கு ரெயிலில் இடம் இல்லாததால் பயணம் செய்ய முடியவில்லை.
3. தர்மபுரி மாவட்டத்தில் தங்கி பணிபுரிய 1,451 வடமாநில தொழிலாளர்கள் விருப்பம்; அமைச்சர் கே.பி.அன்பழகன் பேட்டி
1,451 வடமாநில தொழிலாளர்கள் தர்மபுரி மாவட்டத்திலேயே தங்கி பணிபுரிய விருப்பம் தெரிவித்துள்ளனர் என்று அமைச்சர் கே.பி.அன்பழகன் கூறினார்.
4. கோவையில் இருந்து சேலத்துக்கு 160 கி.மீ. தூரம் நடந்து வந்த ஒடிசா தொழிலாளர்கள்
கோவையில் இருந்து சேலத்துக்கு 160 கி.மீட்டர் தூரம் ஒடிசா தொழிலாளர்கள் நடந்து வந்தனர். அவர்கள் சொந்த ஊருக்கு அனுப்பி வைக்க வேண்டும் என்று கோரிக்கை விடுத்துள்ளனர்.
5. விழுப்புரத்தில் இருந்து பீகாருக்கு 450 பேர் சிறப்பு ரெயிலில் அனுப்பி வைப்பு
விழுப்புரம், கள்ளக்குறிச்சி, கடலூர், திருவண்ணாமலை ஆகிய 4 மாவட்டங்களில் தங்கியிருந்து பல்வேறு இடங்களில் வேலை செய்து வந்த பீகார் மாநிலத்தை சேர்ந்த 450 பேரை சொந்த மாநிலத்திற்கு அனுப்பி வைக்க 4 மாவட்ட நிர்வாகத்தினரும் ஏற்பாடு செய்தனர்.