எஸ்.எஸ்.எல்.சி. தேர்வு எழுதும் மாணவர்கள் அரசு பஸ்களில் இலவசமாக பயணிக்கலாம் துணை முதல்-மந்திரி லட்சுமண் சவதி தகவல்
எஸ்.எஸ்.எல்.சி. தேர்வு எழுதும் மாணவர்கள் அரசு பஸ்களில் இலவசமாக பயணிக்கலாம் என்று துணை முதல்-மந்திரி லட்சுமண் சவதி கூறினார்.
பெங்களூரு,
கர்நாடகத்தில் எஸ்.எஸ்.எல்.சி. தேர்வு வருகிற 25-ந் தேதி தொடங்கி 10 நாட்கள் நடக்கிறது. இதற்கான அனைத்து ஏற்பாடுகளையும் பள்ளி கல்வித்துறை செய்துள்ளது. இந்த நிலையில் தேர்வு எழுத வரும் மாணவர்களுக்கு பஸ் வசதி ஏற்படுத்துவது குறித்து போக்குவரத்துத்துறை அதிகாரிகளுடன் பள்ளி கல்வித்துறை மந்திரி சுரேஷ்குமார் பெங்களூருவில் நேற்று ஆலோசனை நடத்தினார். இதில் போக்குவரத்து துறையை நிர்வகிக்கும் துணை முதல்-மந்திரி லட்சுமண் வசதி உள்பட அத்துறையின் உயர் அதிகாரிகள் கலந்து கொண்டனர். இதில் மந்திரி சுரேஷ்குமார் பேசியதாவது:-
மாணவர்களின் நலன் கருதி எஸ்.எஸ்.எல்.சி. தேர்வை நடத்த வேண்டியது அவசியம். இதை கர்நாடக ஐகோர்ட்டும் ஆதரித்துள்ளது. வருகிற 25-ந் தேதி தேர்வு தொடங்குகிறது. எக்காரணம் கொண்டும், மாணவர்களுக்கு தேர்வு எழுதும் வாய்ப்பு மறுக்கப்படக்கூடாது என்பது அரசின் நோக்கம் ஆகும். அதனால் மாணவர்களுக்கு போக்குவரத்து வசதியை ஏற்படுத்த வேண்டும் என்பது அரசின் விருப்பம்.
பள்ளி கல்வித்துறையில் உள்ள வாகனங்கள் மற்றும் தனியார் கல்வி நிலையங்களின் வாகனங்களை நாங்கள் பெற்றுக் கொண்டுள்ளோம். மாநிலத்தில் தேவையான இடங்களில் அரசு பஸ்களை இயக்க போக்குவரத்து துறை ஒத்துழைப்பு வழங்க வேண்டும். மாணவர்களின் அடையாள அட்டை அல்லது தேர்வு அறை நுழைவு சீட்டு ஆகியவற்றின் அடிப்படையில் அவர்கள் இலவசமாக பயணிக்க அனுமதிக்க வேண்டும்.
அதே போல் வருகிற 18-ந் தேதி நடைபெறும் பி.யூ.கல்லூரி 2-ம் ஆண்டு ஆங்கில பாடத்தேர்வு எழுதும் மாணவர்களுக்கும் போக்குவரத்து வசதியை ஏற்படுத்தி கொடுக்க வேண்டும். இவ்வாறு சுரேஷ்குமார் பேசினார்.
இந்த கூட்டத்தில் துணை முதல்-மந்திரி லட்சுமண் சவதி பேசும்போது கூறியதாவது:-
எஸ்.எஸ்.எல்.சி. தேர்வு எழுதும் மாணவர்களுக்கு எந்த தொந்தரவும் ஏற்படக்கூடாது. தேர்வு நடைபெறும் நாட்களில் அவர்கள் அரசு பஸ்களில் இலவசமாக பயணிக்கலாம். அவர்களின் வசதிக்காக பஸ்களை இயக்க நாங்கள் தயாராக உள்ளோம். இந்த தேர்வை நடத்துவது அவசியம் என்று கர்நாடக ஐகோர்ட்டும் கூறியுள்ளது. அத்துடன் மாணவர்களின் உடல் ஆரோக்கியத்தை காப்பதும் அரசின் முக்கிய பணியாகும்.
இந்த தேர்வை சிக்கல் இன்றி நடத்துவதில் போக்குவரத்து துறையின் பங்கும் அடங்கியுள்ளது. போக்குவரத்துத்துறை அதிகாரிகள், மாணவர்களின் நலன் கருதி அவர்களின் வசதிக்காக பஸ்களை இயக்க வேண்டும். இதில் அதிகாரிகள் அதிக கவனம் செலுத்த வேண்டும். மாநிலத்தின் எல்லை பகுதியில் உள்ள மையங்களுக்கு வரும் மாணவர்களுக்கும் பஸ் வசதி ஏற்படுத்தி கொடுக்கப்படும். இவ்வாறு லட்சுமண் சவதி கூறினார்.
இந்த கூட்டத்தில் போக்குவரத்துத்துறை முதன்மை செயலாளர் அஞ்சும் பர்வேஸ், கமிஷனர் சிவக்குமார், பள்ளி கல்வித்துறை முதன்மை செயலாளர் உமாசங்கர், கர்நாடக அரசு போக்குவரத்து கழக நிர்வாக இயக்குனர் சிவயோகி கலசத், பெங்களூரு மாநகர போக்குவரத்து கழக நிர்வாக இயக்குனர் ஷிகா, பொது கல்வித்துறை கமிஷனர் ஜெகதீஷ், பி.யூ.கல்லூரி கல்வி இயக்குநர் கனகவள்ளி மற்றும் அதிகாரிகள் பலர் கலந்து கொண்டனர்.

Related Tags :
Next Story