மாவட்ட செய்திகள்

கணவர் மது குடித்து விட்டு வீட்டுக்கு வந்ததால் இளம்பெண் தீக்குளித்து தற்கொலை + "||" + Young woman commits suicide after her husband comes home after drinking alcohol

கணவர் மது குடித்து விட்டு வீட்டுக்கு வந்ததால் இளம்பெண் தீக்குளித்து தற்கொலை

கணவர் மது குடித்து விட்டு வீட்டுக்கு வந்ததால் இளம்பெண் தீக்குளித்து தற்கொலை
கணவர் மது குடித்து விட்டு வீட்டுக்கு வந்ததால், இளம்பெண் தீக்குளித்து தற்கொலை செய்து கொண்டார். இந்த சம்பவம் குறித்து போலீஸ் தரப்பில் கூறப்பட்டதாவது:-
சங்ககிரி,

கிருஷ்ணகிரி மாவட்டம் தேன்கனிக்கோட்டை தளி கோத்தனூர் பகுதியை சேர்ந்தவர் சீனிவாசன் (வயது 42). இவரது மகள் சந்திரிகா (19). இவருக்கும், தேர்பேட்டை பகுதியை சேர்ந்த மணிகண்டன் (22) என்பவருக்கும் கடந்த ஒரு ஆண்டுக்கு முன்பு திருமணம் நடந்தது. தொடர்ந்து அவர்கள் தேர்பேட்டையில் குடும்பம் நடத்தி வந்தனர்.


இந்த நிலையில் ஜோதிடரிடம் சென்று சந்திரிகாவுக்கு ஜாதகம் பார்த்தனர். அப்போது ஜாதகம் சரியில்லை, வேறு ஒரு ஊருக்கு சென்று வசிக்கும்படி ஜோதிடர் கூறியதாக தெரிகிறது. இதனால் மணிகண்டன், தனது மனைவியை அழைத்துக்கொண்டு சங்ககிரிக்கு வந்தார். அங்கு ஒரு வாடகை வீட்டில் 2 பேரும் கடந்த சில நாட்களாக வசித்து வந்தனர்.

மேலும் மணிகண்டன் சங்ககிரியில் உள்ள ஒரு பஞ்சர் கடையில் வேலை பார்த்து வந்தார். இதனிடையே கடந்த சில நாட்களாக மணிகண்டன் மதுகுடித்து விட்டு வீட்டுக்கு வந்ததாக தெரிகிறது. இதனால் சந்திரிகா மனஉளைச்சல் அடைந்தால், கணவன்-மனைவிக்கு இடையே பிரச்சினை ஏற்பட்டதாக கூறப்படுகிறது.

இந்த நிலையில் நேற்று முன்தினம் இரவு கணவன் வேலைக்கு சென்ற நேரத்தில் வீட்டில் தனியாக இருந்த சந்திரிகா, மண்எண்ணெய் ஊற்றி தீ வைத்துக்கொண்டார். இதனால் அலறித்துடித்த அவரை அக்கம்பக்கத்தினர் மீட்டு, சிகிச்சைக்காக சங்ககிரி அரசு ஆஸ்பத்திரியில் சேர்த்தனர். பின்னர் மேல் சிகிச்சைக்காக சேலம் அரசு ஆஸ்பத்திரியில் அவர் அனுமதிக்கப்பட்டார். அங்கு சிகிச்சை பலனின்றி சந்திரிகா பரிதாபமாக இறந்தார்.

தீக்குளித்து இளம்பெண் தற்கொலை செய்த சம்பவம் தொடர்பாக சங்ககிரி போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகிறார் கள்.

தொடர்புடைய செய்திகள்

1. நடிகர் சுஷாந்த் சிங் தற்கொலை வழக்கு நடிகை ரியா சக்ரபோர்த்தி தலைமறைவு? போலீசார் விசாரிக்க சென்றபோது வீட்டில் இல்லை
இந்தி நடிகர் சுஷாந்த் சிங் தற்கொலை வழக்கு தொடர்பாக விசாரிக்க பாட்னா போலீசார் மும்பை வந்தனர். நடிகை ரியா சக்ரபோர்த்தி வீட்டுக்கு சென்றபோது அவர் அங்கு இல்லை.
2. நடிகர் சுஷாந்த் சிங் தற்கொலை வழக்கில் திருப்பம் நடிகை ரியா சக்ரபோர்த்தி கைதாவாரா? பாட்னா போலீசார் மும்பை வந்தனர்
தற்கொலை வழக்கில் திடீர் திருப்பமாக நடிகர் சுஷாந்த் சிங் காதலி ரியா சக்ரபோர்த்தி கைதாவாரா? என்ற பரபரப்பு ஏற்பட்டு உள்ளது. அவரிடம் விசாரணை நடத்த பாட்னா போலீசார் மும்பை வந்தனர்.
3. சென்னையில் நடிகை விஜயலட்சுமி தற்கொலை முயற்சி ஆஸ்பத்திரியில் அனுமதி
சென்னையில் நடிகை விஜயலட்சுமி தற்கொலைக்கு முயற்சித்தார். அவர் ஆஸ்பத்திரியில் அனுமதிக்கப்பட்டார்.
4. வாய்மேடு அருகே பரிதாபம்: 2 ஆண் குழந்தைகளை கிணற்றில் வீசிக்கொன்று பெண் தற்கொலை முயற்சி
வாய்மேடு அருகே 2 ஆண் குழந்தைகளை கிணற்றில் வீசிக்கொன்று பெண் தற்கொலைக்கு முயன்ற சம்பவம் மிகுந்த பரிதாபத்தை ஏற்படுத்தி உள்ளது.
5. வேலூர் சிறையில் பரபரப்பு விசாரணை கைதி ஜன்னல் கம்பியை வயிற்றில் குத்தி தற்கொலை முயற்சி
வேலூர் சிறையில் விசாரணை கைதி ஜன்னல் கம்பியை வயிற்றில் குத்திக் கொண்டு தற்கொலைக்கு முயன்றார். இதனால் சிறையில் பரபரப்பு ஏற்பட்டது.