ராஜதானி அருகே பாதுகாப்பு இன்றி பணியாற்றிய சுகாதார பணியாளர்


ராஜதானி அருகே பாதுகாப்பு இன்றி பணியாற்றிய சுகாதார பணியாளர்
x
தினத்தந்தி 5 Jun 2020 6:44 AM IST (Updated: 5 Jun 2020 6:44 AM IST)
t-max-icont-min-icon

தேனி மாவட்டம் ராஜதானி அருகே எந்தவிதமான பாதுகாப்பும் இன்றி கிருமி நாசினி தெளிக்கும் பணியில் சுகாதார பணியாளர் ஒருவர் ஈடுபட்டார்.

தேனி, 

தேனி மாவட்டம் ராஜதானி அருகே கோத்தலூத்து கிராமத்துக்கு சென்னையில் இருந்து வந்து தங்கி இருந்த பெண்ணுக்கு கொரோனா பாதிப்பு உறுதி செய்யப்பட்டுள்ளது. இதனால், அந்த கிராமம் நோய் கட்டுப்பாட்டு பகுதியாக அறிவிக்கப்பட்டு, அங்கு நேற்று கிருமி நாசினி தெளிக்கும் பணி நடந்தது. அப்போது முக கவசம், கையுறை, பாதுகாப்பு கவச உடை என எந்தவிதமான பாதுகாப்பும் இன்றி கிருமி நாசினி தெளிக்கும் பணியில் சுகாதார பணியாளர் ஒருவர் ஈடுபட்டார். இதனால் அவருக்கு நோய் தொற்று பரவும் அபாயம் உள்ளது. எனவே இதுபோன்று பாதுகாப்பு இன்றி பணியாற்றும் சுகாதார பணியாளர்களுக்கு முக கவசம், கையுறை, பாதுகாப்பு கவச உடை உள்ளிட்டவற்றை வழங்க வேண்டும் என்று சமூக ஆர்வலர்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.

Next Story