ஓசூர், உத்தனபள்ளி, தேன்கனிக்கோட்டை பகுதிகளில் நாளை மின்சாரம் நிறுத்தம்


ஓசூர், உத்தனபள்ளி, தேன்கனிக்கோட்டை பகுதிகளில் நாளை மின்சாரம் நிறுத்தம்
x
தினத்தந்தி 5 Jun 2020 6:59 AM IST (Updated: 5 Jun 2020 6:59 AM IST)
t-max-icont-min-icon

ஓசூர் மின் வாரிய செயற்பொறியாளர் குமார் வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பில் கூறியிருப்பதாவது:-

ஓசூர்,

 கிருஷ்ணகிரி மின் பகிர்மான வட்டம், ஓசூர் கோட்டத்தை சேர்ந்த ஓசூர் மின்நகர், உத்தனபள்ளி மற்றும் தேன்கனிக்கோட்டை ஆகிய துணை மின் நிலையங்களில், நாளை (சனிக்கிழமை) அத்தியாவசிய பராமரிப்பு பணிகள் மேற்கொள்ளப்பட உள்ளது.

எனவே, நாளை காலை 10 மணி முதல் மதியம் 2 மணி வரை ஓசூர் பழைய டெம்பிள் அட்கோ, சானசந்திரம், ஒன்னல்வாடி, சானமாவு, தொரப்பள்ளி, காரப்பள்ளி, கொல்லப்பள்ளி, திருச்சிப்பள்ளி, அலசநத்தம், பெரியார் நகர், பாரதிதாசன் நகர், குமரன் நகர், வள்ளுவர் நகர், புதிய பஸ் நிலையம், காமராஜ் காலனி, அண்ணா நகர், எம்.ஜி.ரோடு, நேதாஜி ரோடு (பகுதி), சீத்தாராம் நகர் மற்றும் அதன் சுற்றுப்புற பகுதிகளிலும், உத்தனபள்ளி, அகரம், தியான துர்க்கம், நாகமங்கலம், நல்லராலபள்ளி, பீர்ஜேபள்ளி, உள்ளுகுறுக்கை, போடிச்சிபள்ளி, காடுதானபள்ளி, இருதாளம், வரகானபள்ளி, டி.கொத்தப்பள்ளி, கெலமங்கலம், அனுசோனை, கடூர், பொம்மதாதனூர், சின்னட்டி, ஜே.காருபள்ளி, முகலூர், அக்கொண்டபள்ளி, டி.கொத்தூர், பைரமங்கலம், ஜக்கேரி, பச்சனப்பட்டி, பஞ்சாட்சிபுரம், பேவநத்தம், அலசட்டி, தேன்கனிக்கோட்டை, மாரசந்திரம், நொகனூர், குந்துகோட்டை, அந்தேவனபள்ளி, அஞ்செட்டி, உரிகம், தக்கட்டி, ஒசட்டி, கண்டகானபள்ளி, பாலதோட்டனபள்ளி, செட்டிபள்ளி, பேளூர், மருதானபள்ளி, தண்டரை, பென்னங்கூர், திம்மசந்திரம், அரசகுப்பம் மற்றும் சுற்று வட்டாரத்திலும் மின்சார வினியோகம் நிறுத்தம் செய்யப்படும். இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.

Next Story