நெல்லை மனோன்மணியம் சுந்தரனார் பல்கலைக்கழகத்தில் ஆராய்ச்சி படிப்புக்கான தகுதி தேர்வுக்கு மாணவர்கள் விண்ணப்பிக்கலாம் பதிவாளர் தகவல்


நெல்லை மனோன்மணியம் சுந்தரனார் பல்கலைக்கழகத்தில் ஆராய்ச்சி படிப்புக்கான தகுதி தேர்வுக்கு மாணவர்கள் விண்ணப்பிக்கலாம் பதிவாளர் தகவல்
x
தினத்தந்தி 5 Jun 2020 7:01 AM IST (Updated: 5 Jun 2020 7:01 AM IST)
t-max-icont-min-icon

நெல்லை மனோன்மணியம் சுந்தரனார் பல்கலைக்கழகத்தில் ஆராய்ச்சி படிப்புக்கான தகுதி தேர்வுக்கு மாணவர்கள் விண்ணப்பிக்கலாம் என்று பதிவாளர் சந்தோஷ் பாபு தெரிவித்து உள்ளார்.

நெல்லை, 

நெல்லை மனோன்மணியம் சுந்தரனார் பல்கலைக்கழகத்தில் ஆராய்ச்சி படிப்புக்கான தகுதி தேர்வுக்கு மாணவர்கள் விண்ணப்பிக்கலாம் என்று பதிவாளர் சந்தோஷ் பாபு தெரிவித்து உள்ளார்.

இதுகுறித்து அவர் வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பில் கூறி இருப்பதாவது:-

ஆராய்ச்சி மாணவர்கள்

நெல்லை மனோன்மணியம் சுந்தரனார் பல்கலைக்கழகத்தில் முழு நேர ஆராய்ச்சிக்காக தேர்வு செய்யப்படும் தகுதிமிக்க ஆராய்ச்சி மாணவர்களுக்கு உதவித்தொகை பெறும் வாய்ப்புகள் உண்டு. மனோன்மணியம் சுந்தரனார் பல்கலைக்கழகத்தின் பல்வேறு துறைகளில் உள்ள பாடப்பிரிவுகளில் இளம் முனைவர் (எம்.பில்.), முனைவர் (பிஎச்.டி.) பட்ட பதிவுக்கான தகுதி தேர்வுக்கான விண்ணப்பங்கள் வரவேற்கப்படுகின்றன.

முதுகலை (பி.ஜி.) இறுதிப்பருவத்தில் பயிலும் மாணவர்களும் தகுதித்தேர்வில் கலந்து கொள்ளலாம். ஆனால் இளம் முனைவர் பட்ட பதிவின்போதும் மற்றும் முனைவர் பட்ட பதிவின்போதும், அவர்கள் முதுநிலையில் தேர்ச்சி பெற்று, இறுதி மதிப்பெண் பட்டியல் சமர்ப்பிக்க வேண்டும்.

விண்ணப்பிக்க...

மேலும் முனைவர் பட்டப்பதிவினை இளம் முனைவர் பட்டம் கொண்டு பதிவு செய்ய விரும்புகிறவர்கள் இளநிலை ஆராய்ச்சியிலும் தேர்ச்சி பெற்று, இறுதி மதிப்பெண் பட்டியல் சமர்ப்பிக்க வேண்டும். இதுதொடர்பாக பாடப்பிரிவுகள், அடிப்படை தகுதிகள், கட்டண விவரங்கள், தகுதித்தேர்வு தேதி மற்றும் அனுமதி நெறிமுறைகள் www.msun-iv.ac.in என்ற பல்கலைக்கழக இணையதளத்தில் கொடுக்கப்பட்டு உள்ளது.

நெட், செட், ஜே.ஆர்.எப்., கேட் ஆகிய தேர்வுகளில் தேர்ச்சி பெற்றவர்களுக்கு இந்த தகுதி தேர்வில் இருந்து விலக்கு அளிக்கப்படுகிறது. தகுதித்தேர்வின் தேர்ச்சியானது ஒரு ஆண்டுக்கு மட்டும் செல்லுபடியாகும் (இரண்டு அமர்வுகள் மட்டும்). இதுகுறித்த விவரங்களை பல்கலைக்கழக இணையதளத்தில் தெரிந்து கொள்ளலாம்.

மேற்கண்ட தகுதித்தேர்வு எழுத விருப்பமுள்ளவர்கள், பல்கலைக்கழக இணையதளத்தில் உள்ள ஆராய்ச்சி பிரிவு பகுதியின் இணையதள விண்ணப்பம் மூலமாக விண்ணப்பித்துக் கொள்ளலாம். தகுதி தேர்வுக்கான கட்டணத்தொகை ரூ.1,000 மட்டும் ஆகும். பல்கலைக்கழக இணையதளத்தில் விண்ணப்பங்களை பதிவிறக்கம் செய்து கொள்ளலாம். இதற்கான கடைசி தேதி மற்றும் தேர்வு நாள் பின்னர் அறிவிக்கப்படும்.

இவ்வாறு அதில் தெரிவிக்கப்பட்டு உள்ளது.

Next Story