உயர்அழுத்த மின்கோபுரம் அமைக்கும் பணிக்கு எதிர்ப்பு ; பொதுமக்கள் தர்ணா போராட்டம்


உயர்அழுத்த மின்கோபுரம் அமைக்கும் பணிக்கு எதிர்ப்பு ; பொதுமக்கள் தர்ணா போராட்டம்
x
தினத்தந்தி 5 Jun 2020 8:10 AM IST (Updated: 5 Jun 2020 8:10 AM IST)
t-max-icont-min-icon

தர்மபுரி அரசு கலைக்கல்லூரி அருகே குடியிருப்பு பகுதியில் உயர் அழுத்த மின் கோபுரம் அமைக்கும் பணிக்கு எதிர்ப்பு தெரிவித்து பொதுமக்கள் தர்ணா போராட்டம் நடத்தினர்.

நல்லம்பள்ளி,

தர்மபுரி அரசு கலைக்கல்லூரி அருகே உள்ள நேருநகர் பகுதியில் 2 ஆயிரத்திற்கும் மேற்பட்ட குடியிருப்பு உள்ளன. இந்த பகுதியில் உள்ள ஒரு காலியிடத்தில் உயர்அழுத்த மின்கோபுரம் அமைக் கும் பணிக்காக இடம் தேர்வு செய்யப்பட்டது. இதற்காக அந்த பகுதியில் குழி தோண்டும் பணி தொடங்கியது. இதுபற்றி தகவல் அறிந்த அந்த பகுதி பொதுமக்கள் அங்கு திரண்டனர்.

குடியிருப்பு பகுதிக்கு மத்தியில் உயர்அழுத்த மின்கோபுரம் அமைக்ககூடாது என வலியுறுத்தி தர்ணா போராட்டத்தில் ஈடுபட்டனர். போராட்டத்தில் ஈடுபட்டவர்களிடம் சம்பந்தப்பட்ட துறையினர் மற்றும் அதியமான்கோட்டை போலீசார் பேச்சுவார்த்தை நடத்தினார்கள்.

அப்போது உயர்அழுத்த மின்கோபுரத்தை வேறு இடத்திற்கு மாற்றம் செய்ய வேண்டும் என்று போராட்டத்தில் ஈடுபட்டவர்கள் வலியுறுத்தினார்கள். இந்த போராட்டத்தால் அந்த பகுதியில் பரபரப்பு ஏற்பட்டது.


Next Story