நாமக்கல்லில் முககவசம் அணியாமல் வந்தவர்களுக்கு ரூ.14 ஆயிரம் அபராதம்


நாமக்கல்லில் முககவசம் அணியாமல் வந்தவர்களுக்கு ரூ.14 ஆயிரம் அபராதம்
x
தினத்தந்தி 5 Jun 2020 8:34 AM IST (Updated: 5 Jun 2020 8:34 AM IST)
t-max-icont-min-icon

நாமக்கல் மாவட்டத்தில் கொரோனா வைரஸ் பரவலை தடுக்க ஊரடங்கு உத்தரவு பிறப்பிக்கப்பட்டு அமலில் இருந்து வருகிறது. இருப்பினும் வெளியே வரும் பொதுமக்கள் கண்டிப்பாக முக கவசம் அணிய வேண்டும்.

நாமக்கல்,

 சமூக இடைவெளியை கடைபிடிக்க வேண்டும் என அறிவுறுத்தப்பட்டு உள்ளது. இதை மீறி முககவசம் அணியாமல் வெளியே வரும் நபர்களுக்கு ரூ.100 வீதம் அபராதம் விதிக்கப்பட்டு உள்ளது. இந்த நடவடிக்கையை கடுமையாக பின்பற்ற மாவட்ட கலெக்டர் மெகராஜ் அதிகாரிகளுக்கு உத்தரவிட்டு உள்ளார்.

அதன்படி நேற்று நாமக்கல்லில் வருவாய்த்துறை, உள்ளாட்சித்துறை அதிகாரிகள் போலீசாருடன் இணைந்து வகுரம்பட்டி ஊராட்சிக்கு உட்பட்ட ஆண்டவர் பெட்ரோல் விற்பனை நிலைய பஸ்நிறுத்தம் முன்பு திடீர் வாகன சோதனையில் ஈடுபட்டு, இருசக்கர மற்றும் 4 சக்கர வாகனங்களில் முக கவசம் அணியாமல் வந்த நபர்களுக்கு அபராதம் விதித்தனர். இதில் முககவசம் அணியாமல் வந்த நபர்களுக்கு ரூ.14 ஆயிரம் அபராதம் விதிக்கப்பட்டதாக அதிகாரிகள் தெரிவித்தனர்.

இந்த சோதனையின்போது கோழி எரு ஏற்றுவதற்காக சென்று கொண்டு இருந்த லாரியை மடக்கி அதிகாரிகள் ஆய்வு செய்தனர். அப்போது அந்த லாரியின் கேபினில் 10 பெண் தொழிலாளர்களை நெருக்கமாக அமர அமைத்து சமூக இடைவெளியை பின்பற்றாமல் அழைத்து செல்வது தெரியவந்தது. இதையடுத்து லாரியின் டிரைவருக்கு அதிகாரிகள் ரூ.500 அபராதம் விதித்தனர். இந்த சோதனையில் தாசில்தார் பச்சைமுத்து, வட்டார வளர்ச்சி அதிகாரிகள் தேன்மொழி, அசோகன் உள்ளிட்டோர் கலந்து கொண்டனர். 

Next Story