நாமக்கல் மாவட்டத்தில் 11 வயது சிறுவன் உள்பட மேலும் 2 பேருக்கு கொரோனா
நாமக்கல் மாவட்டத்தில் 11 வயது சிறுவன் உள்பட மேலும் 2 பேருக்கு கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டு இருப்பதை தொடர்ந்து பாதிப்பு எண்ணிக்கை 85 ஆக உயர்ந்து உள்ளது.
நாமக்கல்,
நாமக்கல் மாவட்டத்தில் இதுவரை 83 பேர் கொரோனா வைரசால் பாதிக்கப்பட்டு உள்ளனர். இவர்களில் திருச்செங்கோடு கூட்டப்பள்ளியை சேர்ந்த 49 வயது நிரம்பிய லாரி டிரைவர் சிகிச்சை பலன்இன்றி இறந்து விட்டார். 77 பேர் குணமாகி வீடு திரும்பிவிட்டனர். மீதமுள்ள 5 பேர் நாமக்கல் மற்றும் ராசிபுரம் அரசு ஆஸ்பத்திரிகளில் சிகிச்சை பெற்று வருகின்றனர்.
இந்த நிலையில் கொரோனாவுக்கு பலியான லாரி டிரைவரின் 11 வயது மகனுக்கு நேற்று கொரோனா தொற்று பரவி இருப்பது உறுதி செய்யப்பட்டு உள்ளது. இதேபோல் அவரின் 49 வயது நிரம்பிய தங்கைக்கும் கொரோனா உறுதி செய்யப்பட்டு உள்ளது. இவர் தற்போது திருச்சி மாவட்டம் உப்பிலியாபுரம் பகுதியில் வசித்து வருகிறார். இவர்கள் இருவருக்கும் திருச்செங்கோடு அரசு ஆஸ்பத்திரியில் சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது.
இதனால் நாமக்கல் மாவட்டத்தில் கொரோனாவால் பாதிக்கப்பட்ட நபர்களின் எண்ணிக்கை 85 ஆக உயர்ந்து உள்ளது. இவர்களது குடும்ப உறுப்பினர்கள் மற்றும் இவர்களுடன் தொடர்பில் இருந்த 11 பேர் தனிமைப்படுத்தப்பட்டு கண்காணிக்கப்பட்டு வருவதாக சுகாதாரத்துறை அதிகாரிகள் தெரிவித்தனர்.
நாமக்கல் மாவட்டத்தில் முதல் கட்டமாக 77 பேர் கொரோனாவால் பாதிக்கப்பட்டு இருந்தனர். அதற்கு பின்னர் சுமார் 21 நாட்கள் யாருக்கும் கொரோனா தொற்று ஏற்படவில்லை. தற்போது 2-வது கட்டமாக மேலும் 8 பேர் கொரோனாவால் பாதிக்கப்பட்டு இருப்பதால் பொதுமக்கள் அச்சம் அடைந்து உள்ளனர்.

Related Tags :
Next Story