ஏ.டி.எம். மையத்தில் கொள்ளை முயற்சி; அலாரம் அடித்ததால் ரூ.20 லட்சம் தப்பியது
மேச்சேரியில் உள்ள ஒரு வங்கி ஏ.டி.எம். மையத்தில் கொள்ளையடிக்க முயற்சி நடந்தது. அலாரம் அடித்ததால் ரூ.20 லட்சம் தப்பியது.
மேச்சேரி,
சேலம் மாவட்டம் மேச்சேரி பஸ் நிலையத்துக்கு அருகில் மேட்டூர் சாலையில் இந்தியன் வங்கி செயல்பட்டு வருகிறது. வங்கி இயங்கும் கட்டிடத்திலேயே ஏ.டி.எம். மையம் உள்ளது. இந்த மையத்தில் 2 ஏ.டி.எம். எந்திரங்கள் உள்ளன. இந்த நிலையில் நேற்று அதிகாலை 2 மணி அளவில் ஏ.டி.எம். மையத்துக்கு 2 வாலிபர்கள் வந்தனர்.
திடீரென்று அவர்கள் ஒரு ஏ.டி.எம். எந்திரத்தை கடப்பாரையால் உடைத்து பணத்தை கொள்ளையடிக்க முயன்றனர். அந்த நேரத்தில் அலாரம் அடித்துக்கொண்டு, நெடுஞ்சாலை போலீஸ் ரோந்து வாகனம் சென்றது. மேலும் ஏ.டி.எம். மையத்திலும் அலாரம் அடித்தது. இதனால் அச்சம் அடைந்த 2 வாலிபர்களும் அங்கிருந்து தப்பி ஓடினர்.
இதுகுறித்து தகவல் அறிந்து அங்கு வந்த மேச்சேரி போலீசார், ஏ.டி.எம். மையத்தை பார்வையிட்டனர். அப்போது கடப்பாரையால் ஏ.டி.எம். எந்திரம் உடைக்கப்பட்டு இருப்பதை கண்டு அதிர்ச்சி அடைந்தனர். தொடர்ந்து கைரேகை நிபுணர்கள் வரவழைக்கப்பட்டு, அங்கு பதிவான ரேகைகளை பதிவு செய்தனர்.
இந்த சம்பவம் தொடர்பாக போலீசார் கூறுகையில், 25 வயது மதிக்கத்தக்க 2 வாலிபர்கள், அதிகாலையில் வங்கி ஏ.டி.எம். மையத்துக்கு வந்து பணம் எடுப்பது போன்று நடித்துள்ளனர். பின்னர் ஒரு வாலிபர் வெளியே காவலுக்கு நிற்க, மற்றொரு வாலிபர் கடப்பாரையால் ஏ.டி.எம். எந்திரத்தை உடைக்க முயன்றுள்ளார். இதை மும்பையில் உள்ள கட்டுப்பாட்டு அறையில் இருப்பவர்கள் அறிந்து வங்கி அதிகாரி, போலீசாருக்கு தகவல் அனுப்பினர். மேலும் அலாரத்தை ஒலிக்க செய்தனர். அலாரத்தின் சத்தம் கேட்டதும் 2 பேரும் தப்பி ஓடி விட்டனர். இதனால் ஏ.டி.எம். எந்திரத்தில் இருந்த ரூ.20 லட்சம் தப்பியது என்று கூறினர்.
இது குறித்து வங்கி உதவி மேலாளர் முருகன் மேச்சேரி போலீசில் புகார் கொடுத்தார். அதன் பேரில் போலீசார் வழக்குப்பதிவு செய்து தப்பி ஓடிய 2 வாலிபர்களை வலைவீசி தேடி வருகிறார்கள். இந்த சம்பவம் மேச்சேரியில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.

Related Tags :
Next Story