கிணற்றில் தவறி விழுந்த மான் மீட்பு
சாத்தூர் அருகே கிணற்றில் தவறி விழுந்த மான் மீட்கப்பட்டது.
சாத்தூர்,
சாத்தூர் அருகே நத்தத்துபட்டி சேர்ந்த பழனி என்பவருக்கு சொந்தமான கொய்யா தோப்பு உள்ளது.
அந்த பகுதியில் புள்ளிமான்கள் நடமாட்டம் அதிகமாக இருக்கிறது. நேற்று தண்ணீர் குடிக்க வந்த புள்ளிமான் ஒன்று அந்த கிணற்றில் தவறி விழுந்தது.
தகவல் அறிந்து வந்த சாத்தூர் தீயணைப்பு நிலைய அதிகாரி கதிரேசன் தலைமையிலான தீயணைப்பு படை வீரர்கள். புள்ளிமானை உயிருடன் மீட்டனர்.
பின்னர் அந்த மானை ஸ்ரீவில்லிபுத்தூர் வனவர் மாடசாமி, வனக்காவலர் முத்துராமலிங்கம் ஆகியோரிடம் ஒப்படைத்தனர்.
அவர்கள் மானிற்கு சிகிச்சை அளிக்கப்பட்டு ஸ்ரீவில்லிபுத்தூர் வனப்பகுதியில் விடப்படும் என்றனர்.
Related Tags :
Next Story