ஊட்டியில் காயம் அடைந்து வண்டலூர் பூங்காவுக்கு கொண்டு வரப்பட்ட சிறுத்தைப்புலிக்கு கொரோனா பரிசோதனை
ஊட்டியில் காயம் அடைந்து வண்டலூர் பூங்காவுக்கு கொண்டு வரப்பட்ட சிறுத்தைப்புலிக்கு கொரோனா பரிசோதனை மேற்கொள்ளப்பட்டது.
வண்டலூர்,
சென்னையை அடுத்த வண்டலூர் உயிரியல் பூங்காவில் 2 ஆயிரத்து 700 விலங்குகள் பராமரிக்கப்பட்டு வருகிறது. கொரோனா வைரஸ் தடுப்பு நடவடிக்கையின் காரணமாக கடந்த மார்ச் மாதம் 17-ந்தேதி முதல் வண்டலூர் பூங்கா மூடப்பட்டுள்ளது. மனிதர்களிடம் இருந்து விலங்குகளுக்கு வைரஸ் தொற்று ஏற்படலாம் என்ற அச்சத்தில் வண்டலூர் பூங்காவில் கொரோனா வைரஸ் தடுப்பு நடவடிக்கைகள் தீவிரமாக மேற்கொள்ளப்பட்டுள்ளது.
நீலகிரி மாவட்டம் ஊட்டி அரசு தாவரவியல் பூங்காவின் பணியாளர்கள் குடியிருப்புக்கு அருகே சாலையோரத்தில் கடந்த மாதம் 16-ந் தேதி சிறுத்தைப்புலி ஒன்று காலில் காயத்துடன் நடக்க முடியாமல் படுத்து கிடந்தது. இதனை மீட்ட வனத்துறையினர், கால்நடை ஆஸ்பத்திரிக்கு கொண்டு சென்றனர். அங்கு டாக்டர்கள் சிறுத்தைப்புலிக்கு எக்ஸ்ரே பரிசோதனை செய்து பார்த்தபோது அதன் தலை, மூளைப்பகுதியில் பலத்த காயமும் மற்றும் வலது காலில் பலமாக உள்காயங்கள் இருப்பது தெரியவந்தது. அங்குள்ள கால்நடை ஆஸ்பத்திரியில் தொடர்ந்து சிகிச்சை அளிக்கப்பட்டது. சிகிச்சை ஓரளவு பலன் தந்தாலும் சிறுத்தைப்புலி முழுமையாக குணமடையாமல் அவதிப்பட்டு வந்தது.
இதனையடுத்து ஊட்டியில் உள்ள கால்நடை டாக்டர்கள் சிறுத்தைப்புலியை வண்டலூர் பூங்காவுக்கு கொண்டு சென்று சிகிச்சை அளிப்பதற்கு முடிவு செய்தனர். அதன்படி நேற்று முன்தினம் இரவு ஊட்டியில் இருந்து சிறுத்தைப்புலியை கூண்டில் அடைத்து லாரியில் ஏற்றிக்கொண்டு வனத்துறையினர் வண்டலூருக்கு புறப்பட்டனர். ஊட்டியில் இருந்து லாரியில் வரும்போது சிறுத்தைப்புலிக்கு ஏதாவது உடல் நிலையில் பிரச்சினை ஏற்பட்டால் உடனடியாக சிகிச்சை அளிப்பதற்காக சிறுத்தைப்புலியுடன் தனியாக ஒரு வேனில் மருத்துவர்கள் மற்றும் வனத்துறை உயர் அதிகாரிகள், ஊழியர்கள் ஆகியோர் கொண்ட குழுவினர் கூடவே வந்தனர்.
நீண்ட நேரம் சிறுத்தைப்புலி லாரியில் பயணம் செய்வதால் லாரியை ஒரு மணி நேரத்துக்கு ஒருமுறை நிறுத்திவிட்டு சிறுத்தைப்புலி உடல்நிலை எப்படி இருக்கிறது என்று கூடவே வந்த மருத்துவர்கள் அடிக்கடி சோதனை செய்தனர். சில நேரத்தில் களைப்பாக இருந்த சிறுத்தைப்புலிக்கு டாக்டர்கள் குளுக்கோஸ் மற்றும் ஊட்டச்சத்து மருந்துகளை வழங்கினார்கள். நீண்ட தூர பயணத்துக்கு பிறகு நேற்று காலை 9 மணிக்கு வண்டலூர் பூங்காவுக்கு சிறுத்தைப்புலி கொண்டுவரப்பட்டது.
வண்டலூர் பூங்காவில் உள்ள மருத்துவ குழுவினர் மற்றும் வனத்துறை அதிகாரிகள் லாரியில் இருந்து இறக்கப்பட்ட சிறுத்தைப்புலியை வண்டலூர் பூங்கா விலங்குகள் ஆஸ்பத்திரி அருகே தனியாக ஒரு அறையில் தனிமைப்படுத்தினர். நீண்ட தூரம் பயணித்ததால் சோர்வாக காணப்பட்ட சிறுத்தைப்புலிக்கு முதலுதவி சிகிச்சையை அளித்தனர்.
பின்னர் அந்த சிறுத்தைப்புலிக்கு கொரோனா வைரஸ் தொற்று அல்லது வேறு ஏதாவது நோய்த்தொற்று அறிகுறிகள் இருக்கிறதா? என்பதற்காக சிறுத்தைப்புலியின் சிறுநீர், ரத்தம், எச்சில் போன்ற மாதிரிகளை மருத்துவர்கள் சேகரித்தனர்.
இதுகுறித்து உயிரியல் பூங்கா அதிகாரி ஒருவர் கூறியதாவது:
தனி அறையில் தனிமைப்படுத்தி அடைக்கப்பட்டுள்ள சிறுத்தைப்புலியை தொடர்ந்து 24 மணிநேரமும் ஊழியர்கள் கண்காணித்து வருகின்றனர். பலத்த காயங்களுடன் வந்துள்ள சிறுத்தைப்புலிக்கு வண்டலூர் பூங்காவில் உயர்தர சிகிச்சைகள் அளிக்கப்பட்டு மிக விரைவில் குணம் அடைவதற்கு தேவையான நடவடிக்கை மேற்கொள்ளப்படும். வண்டலூர் பூங்காவில் இதுவரை எந்த விலங்குகளுக்கும் கொரோனா வைரஸ் தொற்று ஏற்படவில்லை. இதனால் புதிதாக ஊட்டியில் இருந்து வந்துள்ள சிறுத்தைப்புலிக்கு ஏதாவது தொற்று இருந்து அது மற்ற விலங்குகளுக்கு பரவிவிடலாம் என்ற அச்சத்தில்தான் ஊட்டியில் இருந்து வந்த சிறுத்தைப்புலிக்கு பரிசோதனைகள் செய்யப்பட்டது. இவ்வாறு அவர் கூறினார்.

Related Tags :
Next Story