தகவல் தொழில்நுட்ப சாதனங்கள் மூலம் தமிழக அரசின் சாதனைகளை பொதுமக்களிடம் கொண்டு செல்ல வேண்டும்
தகவல் தொழில்நுட்ப சாதனங்கள் மூலம் எடப்பாடி பழனிசாமி தலைமையிலான தமிழக அரசின் சாதனைகளை பொதுமக்களிடம் கொண்டு செல்ல வேண்டும் என்று அமைச்சர் காமராஜ் கூறினார்.
கொரடாச்சேரி,
தகவல் தொழில்நுட்ப சாதனங்கள் மூலம் எடப்பாடி பழனிசாமி தலைமையிலான தமிழக அரசின் சாதனைகளை பொதுமக்களிடம் கொண்டு செல்ல வேண்டும் என்று அமைச்சர் காமராஜ் கூறினார்.
நிர்வாகிகள் கூட்டம்
திருவாரூர் மாவட்டம் ஆவூரில், அ.தி.மு.க. தகவல் தொழில்நுட்ப பிரிவு மாவட்ட நிர்வாகிகள் கூட்டம் நடந்தது. கூட்டத்திற்கு அமைச்சர் காமராஜ் தலைமை தாங்கினார். கூட்டத்தில் அமைப்பு செயலாளர் கோபால், தகவல் தொழில்நுட்ப பிரிவு மதுரை மண்டல பொறுப்பாளர் ராஜ் சத்யன், திருவாரூர் மாவட்ட பொறுப்பாளர் சின்னராஜ், ஒன்றியக்குழு தலைவர் சங்கர் உள்ளிட்ட பலர் கலந்து கொண்டனர்.
கூட்டத்தில் அமைச்சர் காமராஜ் பேசியதாவது:-
வழிநடத்தி வருகின்றனர்
பேரறிஞர் அண்ணாவின் நோக்கங்களையும், கொள்கைகளையும் தாங்கி நிற்கும் இயக்கமாக அ.தி.மு.க.வை எம்.ஜி.ஆர். உருவாக்கினார். மறைந்த முன்னாள் முதல்-அமைச்சர் ஜெயலலிதா தனது செயல்திறனால், மாபெரும் மக்கள் இயக்கமாக அ.தி.மு.க.வை வளர்ச்சிப்பாதையில் கொண்டு சென்றுள்ளார். இவர்கள் வழியில் எடப்பாடி பழனிசாமியும், ஓ.பன்னீர்செல்வம் ஆகிய இருவரும் அ.தி.மு.க.வை வழிநடத்தி வருகின்றனர்.
அதுபோல் தமிழக அரசை முதல்-அமைச்சர் எடப்பாடி பழனிசாமி மிகவும் திறம்பட நடத்தி வருகிறார். உலகமே அஞ்சி நிற்கும் கொரோனாவிற்கு எதிராக கடும் போராட்டத்தை நடத்தி வருகிறார். இவரது தலைமையிலான தமிழக அரசின் திட்டமிட்ட செயல்பாடுகளால் கொரோனா உயிரிழப்புகள், பிற மாநிலங்களைவிட தமிழகத்தில் மிக குறைவாக உள்ளது. தமிழகத்தில் ஏழை, எளிய மக்கள் பயன்பெறும் வகையில் திருமண உதவி, மகப்பேறு உதவி, அம்மா உணவகம் என பல்வேறு திட்டங்கள் செயல்படுத்தப்பட்டு வருகிறது.
பொதுமக்களிடம் கொண்டு செல்ல வேண்டும்
உலக அளவில் சிறந்த நிறுவனங்கள் தமிழகத்தில் தொழில் தொடங்க முனைப்பு காட்டுகின்றனர். முதல்-அமைச்சர் எடப்பாடி பழனிசாமி தலைமையிலான தமிழக அரசின் சாதனைகளை தகவல் தொழில்நுட்ப சாதனங்கள் மூலம் மக்களிடம் கொண்டு செல்ல வேண்டும். அதுபோல் எதிர்கட்சிகளின் பொய் பிரச்சாரங்களையும் உரிய ஆதாரங்கள் மூலம் எதிர்கொண்டு மக்களிடம் விழிப்புணர்வை ஏற்படுத்த வேண்டும்.
Related Tags :
Next Story