போலீசாருக்கு கொரோனா தொற்று எதிரொலி: கும்மிடிப்பூண்டி சிப்காட் போலீஸ் நிலையம் மூடல்
போலீஸ்காரர்கள் 2 பேர் கொரோனா வைரஸ் தொற்றால் பாதிக்கப்பட்டதால் கும்மிடிப்பூண்டி சிப்காட் போலீஸ் நிலையத்தை தற்காலிகமாக மூடுவதற்கு மாவட்ட போலீஸ் சூப்பிரண்டு உத்தரவிட்டார்.
கும்மிடிப்பூண்டி,
திருவள்ளூர் மாவட்டம் கும்மிடிப்பூண்டி சிப்காட் தொழிற்பேட்டை பகுதியில் கும்மிடிப்பூண்டி சிப்காட் போலீஸ் நிலையம் இயங்கி வந்தது. இந்த நிலையில் இங்கு பணிபுரிந்து வந்த 24 வயதுடைய காவலர் ஒருவருக்கு கடந்த மாதம் 28ந்தேதி கொரோனா தொற்று உறுதியானதால், பொன்னேரி அரசு ஆஸ்பத்திரியில் அனுமதிக்கப்பட்டு தீவிர சிகிச்சை பெற்று வருகிறார்.
இதைத்தொடர்ந்து, இந்த போலீஸ் நிலையத்தில் பணிபுரிந்த 55 வயதுடைய சிறப்பு சப்இன்ஸ்பெக்டருக்கும் நேற்று முன்தினம் கொரோனா தொற்று உறுதி ஆனது. அவரும் சிகிச்சைக்காக பொன்னேரி அரசு மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டு உள்ளார்.
கும்மிடிப்பூண்டி சிப்காட் போலீஸ் நிலையத்தில் 2 காவலர்களுக்கு கொரோனா தொற்று பரவியதன் எதிரொலியாக மாவட்ட போலீஸ் சூப்பிரண்டு அரவிந்தன் உத்தரவின் பேரில், கும்மிடிப்பூண்டி சிப்காட் போலீஸ் நிலையம் தற்காலிகமாக மூடப்பட்டு உள்ளது.
மேலும் ஒரு வாரம் வரை சிப்காட் போலீஸ் நிலையம் மூடப்பட்டிருக்கும் என போலீசார் தரப்பில் தெரிவிக்கப்பட்டு உள்ளது.
திருவள்ளூர் மாவட்டத்தில் பெரியபாளையம் மற்றும் ஆரணி போலீஸ் நிலையங்கள் போலீசாருக்கு ஏற்பட்ட கொரோனா தொற்று காரணமாக மூடப்பட்டு பின்னர் திறக்கப்பட்டது குறிப்பிடத்தக்கது.

Related Tags :
Next Story