புதிதாக 5 பேருக்கு கொரோனா தொற்று


புதிதாக 5 பேருக்கு கொரோனா தொற்று
x
தினத்தந்தி 6 Jun 2020 5:43 AM IST (Updated: 6 Jun 2020 5:43 AM IST)
t-max-icont-min-icon

புதுவையில் கொரோனா வைரஸ் தொற்றினால் புதிதாக 5 பேர் பாதிக்கப்பட்டுள்ளனர்.

புதுச்சேரி,

புதுவை சுகாதாரத்துறை அமைச்சர் மல்லாடி கிருஷ்ணாராவ் நேற்று நிருபர்களுக்கு பேட்டி அளித்தார். அப்போது அவர் கூறியதாவது:-

புதுவையில் ஏற்கனவே 63 பேர் கொரோனா வைரஸ் தொற்றினால் பாதிக்கப்பட்டு சிகிச்சை பெற்று வந்தனர். இந்தநிலையில் நேற்று 6 பேர் சிகிச்சை குணமடைந்து வீடு திரும்பினர். கோரிமேடு போலீஸ் குடியிருப்பு, சோலைநகர், பாகூர் ஆகிய பகுதிகளை சேர்ந்த 5 பேருக்கு கொரோனா தொற்று பாதித்துள்ளது உறுதி செய்யப்பட்டது. இவர்களையும் சேர்த்து தற்போது 62 பேர் சிகிச்சையில் உள்ளனர்.

புதுவை மாநிலத்தை பொறுத்தவரை இதுவரை 7,293 பேருக்கு பரிசோதனை நடத்தப்பட்டுள்ளது. அதில் 1,647 பேருக்கு தொற்று இல்லை. 14 பேரின் முடிவுகள் வர வேண்டியுள்ளது. ஒட்டுமொத்தமாக 104 பேர் கொரோனா வைரஸ் தொற்றினால் பாதிக்கப்பட்டுள்ளனர். 42 பேர் குணமடைந்து வீடு திரும்பியுள்ளனர்.

கதிர்காமம் அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனையில் நாளை மறுநாள் (திங்கட்கிழமை) முதல் மற்ற சிகிச்சை பிரிவுகளை தொடங்க உள்ளோம். ஆனால் பாதிக்கப்பட்டவர்கள் வீட்டிலிருந்தபடியே சிகிச்சை பெறுவது குறித்து மத்திய அரசின் அனுமதி பெற்று செயல்படுத்துவோம்.

இவ்வாறு அவர் கூறினார்.

Next Story