சுற்றுச்சூழல் துறையின் ஆண்டறிக்கை; நாராயணசாமி வெளியிட்டார்
புதுவை அரசின் அறிவியல் மற்றும் சுற்றுச்சூழல் துறை சார்பில் சுற்றுச்சூழல் ஆண்டு அறிக்கையை முதல்அமைச்சர் நாராயணசாமி வெளியிட்டார்.
புதுச்சேரி,
ஜூன் 5ந் தேதி உலக சுற்றுச்சூழல் தினமாக கொண்டாடப்படுகிறது. இதையொட்டி அறிவியல் தொழில் நுட்பம் மற்றும் சுற்றுச்சூழல் துறை சார்பில் மாணவர்களுக்கு கவிதை, புகைப்படம், மரக்கன்று நடுதல் உள்ளிட்ட பல்வேறு போட்டிகளை அரசு நடத்தி வருகிறது.
அதன்படி இந்த ஆண்டு உலக சுற்றுச்சூழல் தினம் நேற்று கொண்டாடப்பட்டது. இதன் கருப்பொருளாக பல்லுயிர் பாதுகாப்பு இயற்கைக்கான நேரம் என்று ஐக்கிய நாடுகள் அமைப்பு அறிவித்து இருந்தது. தற்போது கொரோனா ஊரடங்கு உத்தரவு அமலில் இருப்பதால் போட்டிகள் அனைத்தும் ஆன்லைன் மூலம் நடத்தப்படுகின்றன.
மாணவமாணவிகள் தங்களது படைப்புகளை ஆன்லைன் மூலம் அனுப்பி வருகின்றனர். படைப்புகள் குவிந்த வண்ணம் உள்ளன. நாளை (ஞாயிற்றுக்கிழமை) வரை தங்களது படைப்புகளை ஆன்லைன் மூலம் அனுப்பலாம் என தெரிவிக்கப்பட்டுள்ளது. அதன்பின் சிறந்த படைப்புகள் தேர்வு செய்யப்பட்டு பரிசுகள் வழங்கப்பட உள்ளது.
இதனை முன்னிட்டு புதுவை அரசின் அறிவியல் மற்றும் சுற்றுச்சூழல் துறை சார்பில் சுற்றுச்சூழல் ஆண்டறிக்கையை முதல்அமைச்சர் நாராயணசாமி வெளியிட்டார். அதை சுற்றுச்சூழல் துறை அமைச்சர் கந்தசாமி பெற்றுக்கொண்டார். நிகழ்ச்சியில் எம்.எல்.ஏ.க்கள் சிவா, ஜெயமூர்த்தி, தலைமை செயலாளர் அஸ்வனி குமார், சுற்றுச்சூழல் துறை செயலாளர் ஸ்மிதா, முதுநிலை பொறியாளர் ரமேஷ் உள்பட பலர் கலந்து கொண்டனர்.

Related Tags :
Next Story