தேனியில் இருந்து வடமாநில தொழிலாளர்கள் 164 பேர் சொந்த ஊருக்கு அனுப்பி வைப்பு
தேனி மாவட்டத்தில் இருந்து மேற்கு வங்கம், உத்தரபிரதேசம் மாநிலங்களை சேர்ந்த தொழிலாளர்கள் 164 பேர் சொந்த ஊருக்கு அனுப்பி வைக்கப்பட்டனர்.
தேனி,
கொரோனா ஊரடங்கால் புலம்பெயர் தொழிலாளர்கள் அவர்களின் சொந்த ஊர்களுக்கு அனுப்பி வைக்கப்பட்டு வருகின்றனர். அதன்படி, தேனி மாவட்டத்தில் பல்வேறு கட்டமாக வடமாநில தொழிலாளர்கள் சொந்த ஊருக்கு அனுப்பி வைக்கப்பட்டு உள்ளனர். இந்நிலையில் நேற்று தேனி மாவட்ட நிர்வாகத்தின் மூலம் மேற்கு வங்கம், உத்தரபிரதேசம் ஆகிய மாநிலங்களை சேர்ந்த தொழிலாளர்கள் 164 பேர் சொந்த ஊருக்கு அனுப்பி வைக்கப்பட்டனர். முன்னதாக அவர்கள், சிறப்பு பஸ்களில் தேனியில் இருந்து மதுரை ரெயில் நிலையத்துக்கு அழைத்து செல்லப்பட்டனர். பின்னர் அங்கிருந்து சிறப்பு ரெயில் மூலம் சொந்த ஊருக்கு அனுப்பி வைக்கப்பட்டனர்.
Related Tags :
Next Story