நாமக்கல் மாவட்டத்தில் தாய், மகள் உள்பட 3 பெண்களுக்கு கொரோனா பாதிப்பு


நாமக்கல் மாவட்டத்தில் தாய், மகள் உள்பட 3 பெண்களுக்கு கொரோனா பாதிப்பு
x
தினத்தந்தி 6 Jun 2020 7:58 AM IST (Updated: 6 Jun 2020 7:58 AM IST)
t-max-icont-min-icon

நாமக்கல் மாவட்டத்தில் தாய், மகள் உள்பட 3 பெண்களுக்கு கொரோனா பாதிப்பு உறுதி செய்யப்பட்டு உள்ளது. இதையடுத்து அவர்களுக்கு அரசு ஆஸ்பத்திரிகளில் சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது.

நாமக்கல்,

நாமக்கல் மாவட்டத்தில் முதல் கட்டமாக 77 பேரும், 2-ம் கட்டமாக 8 பேரும் என இதுவரை 85 பேர் கொரோனா வைரசால் பாதிக்கப்பட்டு இருந்தனர். இந்த நிலையில் நேற்று முன்தினம் டெல்லியில் இருந்து நாமக்கல் மாவட்டம் பரமத்தி வேலூருக்கு 33 வயது பெண், அவரது 12 வயது மகளுடன் வந்து உள்ளார். இவர்கள் இருவருக்கும் கோவை விமான நிலையத்தில் சுகாதாரத்துறை அதிகாரிகள் கொரோனா பரிசோதனை மேற்கொண்டனர். பின்னர் வீட்டிற்கு சென்று தனிமைப்படுத்தி கொள்ள அறிவுறுத்தி இருந்தனர்.

இந்த நிலையில் நேற்று இவர்கள் இருவருக்கும் கொரோனா நோய் தொற்று இருப்பது உறுதியானது. இதையடுத்து நாமக்கல் மாவட்ட சுகாதார துறையினர் தாய் மற்றும் மகளை சிகிச்சைக்காக 108 ஆம்புலன்ஸ் மூலம் நாமக்கல் அரசு மருத்துவ கல்லூரி ஆஸ்பத்திரிக்கு அழைத்து வந்தனர். இங்கு அவர்கள் இருவருக்கும் சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது.

அதேபோல் டெல்லியில் இருந்து ராசிபுரம் வந்த 39 வயது பெண் ஒருவருக்கும் கோவை விமான நிலையத்தில் கொரோனா பரிசோதனை மேற்கொள்ளபட்டது. அதில் அவருக்கு கொரோனா நோய் தொற்று இருப்பது உறுதியானதால் அவர் ராசிபுரம் அரசு ஆஸ்பத்திரியில் சிகிச்சைக்கு அனுமதிக்கப்பட்டார்.

இதற்கிடையே அவர்கள் மூவருடன் தொடர்பில் இருந்த நபர்களையும் சுகாதாரத்துறையினர் தனிமைப்படுத்தி கண்காணித்து வருகின்றனர். அவர்களுக்கும் கொரோனா பரிசோதனை மேற்கொள்ள நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டு வருகிறது. கோவை விமான நிலையத்தில் இவர்களுக்கு கொரோனா பரிசோதனை மேற்கொள்ளப்பட்டு இருப்பதால், நாமக்கல் மாவட்ட கொரோனா தொற்று எண்ணிக்கையில் இது இடம்பெறாது என சுகாதாரத்துறை அதிகாரிகள் தெரிவித்தனர்.

Next Story