நெல்லை மாவட்டத்தில் எஸ்.எஸ்.எல்.சி. தேர்வுக்கு ஹால் டிக்கெட் வினியோகம்
எஸ்.எஸ்.எல்.சி. தேர்வுக்கு ஹால்டிக்கெட் வினியோகம் தொடங்கி உள்ளது.
நெல்லை,
எஸ்.எஸ்.எல்.சி. தேர்வுக்கு ஹால்டிக்கெட் வினியோகம் தொடங்கி உள்ளது.
எஸ்.எஸ்.எல்.சி. தேர்வு
தமிழகத்தில் எஸ்.எஸ்.எல்.சி. பொதுத்தேர்வு கொரோனா பரவலால் ஒத்தி வைக்கப்பட்டிருந்தது. இந்த தேர்வு வருகிற 15-ந்தேததி தொடங்கி நடைபெறுவதாக அறிவிக்கப்பட்டு உள்ளது.
இதையொட்டி தேர்வுக்கூடங்களை தயார் செய்யும் பணியை அந்தந்த மாவட்டத்தில் கல்வி அதிகாரிகள் செய்து வருகின்றனர். இந்த நிலையில் தேர்வு எழுதும் மாணவர்களுக்கு உரிய தேர்வுக்கூட அனுமதி சீட்டு எனப்படும் ஹால்டிக்கெட்டை தேர்வுத்துறை இணையதளத்தில் வெளியிட்டது. அதனை பதிவிறக்கம் செய்து கொள்ளவும் அறிவிப்பு வெளியிடப்பட்டது.
ஹால்டிக்கெட் வினியோகம்
நெல்லை மாவட்டத்தில் எஸ்.எஸ்.எல்.சி. தேர்வு 311 மையங்களில் நடத்தப்படுகிறது. இதில் 28 ஆயிரத்து 33 மாணவ-மாணவிகள் கலந்து கொண்டு தேர்வு எழுதுகிறார்கள். இவர்களுக்கு உரிய ஹால்டிக்கெட்டுகளை அந்தந்த பள்ளி தலைமை ஆசிரியர்கள் பதிவிறக்கம் செய்து தயார் நிலையில் வைத்துள்ளனர். அரசு, அரசு உதவி பெறும் பள்ளிகளில் வருகிற 8-ந்தேதி, 9-ந்தேதிகளில் மாணவ-மாணவிகளுக்கு ஹால்டிக்கெட் வழங்க நடவடிக்கை எடுக்கப்பட்டு உள்ளது.
பெரும்பாலான தனியார் பள்ளிகளில் தேர்வு தொடங்கும் 15-ந்தேதி பள்ளிக்கு வந்த உடன் மாணவ-மாணவிகளிடம் ஹால்டிக்கெட்டை வழங்க ஏற்பாடு செய்யப்பட்டு உள்ளது. ஒருசில பள்ளிகளில் ஹால்டிக்கெட் வழங்கும் பணியை தொடங்கி விட்டனர்.
Related Tags :
Next Story