அம்மா ஸ்கூட்டர் திட்டத்தில் பயன்பெற பெண்கள் விண்ணப்பிக்கலாம் 15-ந்தேதி கடைசிநாள்
நெல்லை மாநகரில் அம்மா ஸ்கூட்டர் திட்டத்தில் பயன்பெற பெண்கள் விண்ணப்பிக்கலாம். இதற்கு விண்ணப்பிக்க வருகிற 15-ந்தேதி கடைசிநாள் ஆகும்.
நெல்லை,
நெல்லை மாநகரில் அம்மா ஸ்கூட்டர் திட்டத்தில் பயன்பெற பெண்கள் விண்ணப்பிக்கலாம். இதற்கு விண்ணப்பிக்க வருகிற 15-ந்தேதி கடைசிநாள் ஆகும்.
இதுகுறித்து நெல்லை மாநகராட்சி ஆணையாளர் கண்ணன் வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பில் கூறிஇருப்பதாவது:-
359 ஸ்கூட்டர்கள்
அம்மா இருசக்கர வாகன திட்டத்தின் கீழ் நெல்லை மாநகராட்சிக்கு உட்பட்ட பகுதிகளுக்கான இலக்கீடு 680 ஸ்கூட்டர் ஆகும். இதில் 321 விண்ணப்பங்கள் பெறப்பட்டு, மகளிர் மேம்பாட்டு நிறுவனத்துக்கு பரிந்துரை செய்யப்பட்டு உள்ளது.
தற்போது இலக்கை எட்டும் வகையில் நெல்லை மண்டலத்துக்கு 57, தச்சநல்லூர் மண்டலத்துக்கு 50, பாளையங்கோட்டை மண்டலத்துக்கு 130, மேலப்பாளையம் மண்டலத்துக்கு 122 என மொத்தம் 359 ஸ்கூட்டர்கள் வழங்குவதற்கான விண்ணப்பங்கள் வரவேற்கப்படுகிறது.
விண்ணப்பம்
இதற்கு விண்ணப்பத்துடன் ஆதார் அட்டை, ஓட்டுனர் உரிமம், ஆதிதிராவிடர் மற்றும் பழங்குடியினராக இருந்தால் அதற்கான சான்றிதழ், கல்வி தகுதி சான்றிதழ், பணிபுரிவதற்கான சான்றுடன் கூடிய ஊதியச்சான்று, சுயதொழில் மூலம் பெறும் வருவாய்க்கான சுய அறிவிப்பு சான்று, வங்கி கணக்கு பாஸ் புத்தகத்தின் முதல் பக்க நகல், பணிபுரியும் நிறுவன அடையாள அட்டை நகல் ஆகியவற்றை இணைக்க வேண்டும்.
முன்னுரிமை அடிப்படையில் மகளிரை குடும்ப தலைவியாக கொண்ட குடும்பம், ஆதரவற்ற பெண், மாற்றுத்திறனாளி பெண், 35 வயதுக்கு மேற்பட்ட திருமணமாகாத பெண், திருநங்கை, மலைப்பகுதி மற்றும் தொலைதூரத்தில் வசிக்கும் பெண் என்ற சிறப்பு தகவல்கள் இருந்தால் அதையும் சேர்க்க வேண்டும்.
15-ந்தேதி கடைசி நாள்
மகளிர் சுய உதவிக்குழுக்களை சேர்ந்த பெண்கள், தனியார் பள்ளி ஆசிரியைகள், தனியார் ஆஸ்பத்திரி ஊழியர்கள், தனியார் அமைப்புகளில் பணிபுரியும் பெண்கள் இந்த திட்டத்தில் விண்ணப்பித்து பயன் பெறலாம்.
விண்ணப்ப படிவங்களை அந்தந்த மண்டல அலுவலகங்களில் இலவசமாக பெற்றுக்கொண்டு உரிய விவரங்களின்படி பூர்த்தி செய்து சம்பந்தப்பட்ட மண்டல உதவி ஆணையர் அலுவலகங்களில் வருகிற 15-ந்தேதிக்குள் (திங்கட்கிழமை) விண்ணப்பிக்க வேண்டும்.
இவ்வாறு அவர் கூறி உள்ளார்.
Related Tags :
Next Story