சேலத்தில் மேலும் 7 பேருக்கு கொரோனா
சேலத்தில் மேலும் 7 பேருக்கு கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது.
சேலம்,
சேலம் மாவட்டத்தில் கொரோனா வைரஸ் பரவுவதை தடுக்க பல்வேறு நடவடிக்கைகள் எடுக்கப்பட்டுள்ளன. இதையொட்டி வெளிமாநிலம் மற்றும் மாவட்டங்களில் இருந்து சேலம் வருபவர்களை மாவட்ட எல்லைகளில் சுகாதாரத்துறையினர் மருத்துவ பரிசோதனை செய்து கண்காணித்து வருகின்றனர்.
இதில் கொரோனாவால் பாதிக்கப்பட்டவர்கள் சேலம் அரசு ஆஸ்பத்திரியில் உள்ள தனிமை வார்டில் அனுமதிக்கப்பட்டு சிகிச்சை பெற்று வருகின்றனர். சேலம் மாவட்டத்தில் நேற்று முன்தினம் பெண் டாக்டர் உள்பட 2 பேருக்கு கொரோனா தொற்று இருப்பது உறுதி செய்யப்பட்டது.
இந்த நிலையில் மராட்டியத்தில் இருந்து சேலம் வந்த ஒருவர் மற்றும் சேலத்தை சேர்ந்த, ஏற்கனவே கொரோனாவால் பாதிக்கப்பட்ட முதுகலை பட்டமேற்படிப்பு டாக்டரின் தாய், அவரது தம்பி, சென்னையை சேர்ந்த 2 பேர், காஞ்சீபுரம், திருவள்ளூர் ஆகிய மாவட்டங்களை சேர்ந்த தலா ஒருவர் என மொத்தம் 7 பேருக்கு கொரோனா தொற்று இருப்பது மருத்துவ பரிசோதனையில் நேற்று உறுதி செய்யப்பட்டது.
இதையடுத்து அவர்கள் சேலம் அரசு ஆஸ்பத்திரியில் உள்ள தனிமை வார்டில் சிகிச்சைக்காக அனுமதிக்கப்பட்டனர். அவர்களுக்கு டாக் டர்கள் குழுவினர் சிகிச்சை அளித்து வருகின்றனர்.
Related Tags :
Next Story