எஸ்.எஸ்.எல்.சி. தேர்வு எழுதும் மாணவ- மாணவிகளுக்கு பள்ளிகளில் ஹால் டிக்கெட் வினியோகம்
தமிழகம் முழுவதும் ஊரடங்கால் நிறுத்தி வைக்கப்பட்டிருந்த எஸ்.எஸ்.எல்.சி. பொதுத்தேர்வு வருகிற 15-ந் தேதி தொடங்குகிறது.
சேலம்,
தேர்வு எழுதும் மாணவ, மாணவிகளின் ஹால் டிக்கெட் ஆன்-லைனில் வெளியிடப்படும் என்றும், மேலும் சம்பந்தப்பட்ட பள்ளி தலைமை ஆசிரியரை தொடர்புகொண்டு பெற்றுக்கொள்ளலாம் என்றும் பள்ளி கல்வித்துறை அறிவித்துள்ளது.
சேலம் மாவட்டத்தில் அனைத்து அரசு மேல்நிலைப்பள்ளிகளிலும் எஸ்.எஸ்.எல்.சி. தேர்வு எழுதும் மாணவ, மாணவிகளுக்கு ஆன்-லைன் மூலம் ஹால் டிக்கெட் பதிவிறக்கம் செய்து மாணவ, மாணவிகளுக்கு வினியோகம் செய்யும் பணி தொடங்கி உள்ளது.
குகை மூங்கப்பாடி அரசு பெண்கள் மேல்நிலைப்பள்ளியில் எஸ்.எஸ்.எல்.சி. தேர்வு எழுதும் மாணவிகளின் வசதிக்காக பெஞ்ச், டெஸ்குகளை தண்ணீரால் சுத்தம் செய்யும் பணியில் ஊழியர்கள் ஈடுபட்டனர்.
சேலம் கோட்டை அரசு பெண்கள் மேல்நிலைப் பள்ளியில் ஆசிரியர், ஆசிரியைகள் நேற்று ஆன்-லைன் மூலம் கணினியில் ஹால்டிக்கெட் பதிவிறக்கம் செய்து அதனை தேர்வு எழுதும் மாணவிகளுக்கு வினியோகம் செய்தனர்.
இதே போல ஆத்தூர், எடப்பாடி, சங்ககிரி, சேலம் புறநகர் ஆகிய கல்வி மாவட்டங்களுக்கு உட்பட்ட அரசு பள்ளிகளில் எஸ்.எஸ்.எல்.சி. மாணவ-மாணவிகளுக்கு ஹால் டிக்கெட் வினியோகம் செய்யும் பணி நடைபெற்றது. இதையொட்டி மாணவ-மாணவிகள் ஆர்வமுடன் தங்களது பள்ளிகளுக்கு சென்று ஹால் டிக்கெட்டை வாங்கி சென்றனர்.
Related Tags :
Next Story