ராஜபாளையத்தில் இன்று மின்தடை
பராமரிப்பு பணிகள் நடைபெறுவதால் ராஜபாளையத்தில் சில பகுதிகளில் மின்சாரம் தடைபடும் என்று அறிவிக்கப்பட்டுள்ளது.
ராஜபாளையம்,
ராஜபாளையம் மின்கோட்டத்தில் உள்ள முடங்கியார் மின்நிலையத்தில் இன்று(சனிக்கிழமை) பராமரிப்பு பணிகள் நடைபெறுவதால் காலை 9 மணி முதல் பிற்பகல் 2 மணி வரை மின்சாரம் தடைபடும். அதன்படி அய்யனார்கோவில், ராஜூக்கள் கல்லூரி, மாலையாபுரம், தாட்கோ காலனி, திருவள்ளுவர் நகர், தென்றல் நகர், சோமையாபுரம், சம்மந்தபுரம், சின்ன மற்றும் பெரிய சுரைக்காய்பட்டி, பழைய பாளையம், மாடசாமி கோவில் தெரு, ஆவரம்பட்டி, ரெயில்வே பீடர் ரோடு, மதுரை ரோடு, ராஜபாளையம் பழைய பஸ் நிலையம், பெரியகடை பஜார் ஆகிய பகுதிகளில் மின்சாரம் தடைபடும் என்று மின்வாரிய செயற்பொறியாளர் மாலதி தெரிவித்துள்ளார்.
Related Tags :
Next Story