பெண்ணுக்கு கருக்கலைப்பு செய்த ஓய்வு பெற்ற செவிலியர் கைது
திருக்கோவிலூர் அருகே பெண்ணுக்கு கருக்கலைப்பு செய்த ஓய்வு பெற்ற செவிலியரை போலீசார் கைது செய்தனர். மேலும் அவரது வீட்டிற்கு ‘சீல்’ வைக்கப்பட்டது.
திருக்கோவிலூர்,
கள்ளக்குறிச்சி மாவட்டம் திருக்கோவிலூர் அருகே உள்ள மணக்குப்பம் முத்தாலம்மன் கோவில் தெருவை சேர்ந்தவர் அர்ச்சுனன். இவருடைய மனைவி சிவலட்சுமி (வயது 36). இவர்களுக்கு ஒரு மகளும், மகனும் உள்ளனர்.
இந்த 2 குழந்தைகளும் ஆபரேஷன் மூலம் பிறந்ததாலும், சிவலட்சுமியின் உடல் வலுவின்றி இருந்ததாலும், அவர் கருத்தடை செய்யவில்லை என தெரிகிறது. இந்த நிலையில் கடந்த சில மாதங்களுக்கு முன்பு சிவலட்சுமி மீண்டும் கர்ப்பம் அடைந்தார். ஏற்கனவே 2 குழந்தைகள் உள்ள நிலையில் தற்போது மீண்டும் ஒரு குழந்தை தேவையா? என்ற குழப்பம் சிவலட்சுமியிடையே தோன்றியது.
இதனால் அவர் கருவை கலைத்து விட முடிவு செய்துள்ளார். இதையடுத்து திருக்கோவிலூர் அரசு மருத்துவமனையில் செவிலியராக பணிபுரிந்து ஓய்வு பெற்று தற்போது மணம்பூண்டி கிராமத்தில் வசிக்கும் முருகேசன் மனைவி ராஜாமணி(65) என்பவர் வீட்டில் வைத்து கருக்கலைப்பு செய்வதாக அறிந்து சிவலட்சுமி அங்கு சென்றார்.
பின்னர் அங்கு அவருக்கு கருக்கலைப்பு செய்யப்பட்டது. ஆனால் சிறிது நேரத்திலேயே அவரது உடல்நிலை பாதிக்கப்பட்டது. இதையடுத்து அவரை உறவினர்கள் மீட்டு திருக்கோவிலூர் அரசு மருத்துவமனையில் சிகிச்சைக்காக சேர்த்தனர். பின்னர் மேல்சிகிச்சைக்காக விழுப்புரம் முண்டியம்பாக்கம் அரசு மருத்துவக்கல்லூரி மருத்துவமனைக்கு அனுப்பி வைக்கப்பட்டார். அங்கு அவருக்கு டாக்டர்கள் தீவிர சிகிச்சை அளித்து வருகின்றனர்.
இதற்கிடையே உடல் நலம் பாதிப்பு குறித்து அவரிடம் டாக்டர்கள் விசாரித்தபோது, முறையற்ற கருக்கலைப்பு தான் காரணம் என தெரியவந்தது. இது குறித்து திருக்கோவிலூர் அரசு மருத்துவமனை முதன்மை மருத்துவ அதிகாரி அலமேலு அரகண்டநல்லூர் போலீசில் புகார் கொடுத்தார். அதன்பேரில் போலீஸ் இன்ஸ்பெக்டர் பாண்டியன், சப்-இன்ஸ்பெக்டர்கள் பாலமுருகன், பொன்னுரங்கம் மற்றும் போலீசார் மணம்பூண்டி கிராமத்திற்கு விரைந்து சென்று ஓய்வு பெற்ற செவிலியர் ராஜாமணியை கைது செய்தனர்.
இதற்கிடையே இந்த சம்பவம் தொடர்பாக விழுப்புரம் மாவட்ட குடும்பநலப்பணிகள் துறை இணை இயக்குனர் டாக்டர் சமுத்திரக்கனி தலைமையிலான மருத்துவக்குழுவினர்கள் விரைந்து வந்து மணம்பூண்டியில் உள்ள ராஜாமணியின் வீட்டை திடீர் சோதனையிட்டனர். அப்போது வீட்டில் கருக்கலைப்புக்கு பயன்படுத்தப்படும் சாதனங்கள் மற்றும் மருந்து, மாத்திரைகள் இருப்பது கண்டுபிடிக்கப்பட்டது. இதையடுத்து அவற்றை பறிமுதல் செய்த அதிகாரிகள், வீட்டை பூட்டி ‘சீல்’ வைத்தனர். இந்த சம்பவம் அப்பகுதியில் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.

Related Tags :
Next Story