சாத்தனூர் குளம், கட்டளை வாய்க்காலில் 3 சிறு பாலங்கள் கட்டும் பணி தீவிரம் ஊரடங்கு தளர்விற்கு பின்னர் மீண்டும் வேலைகள் தொடங்கியது


சாத்தனூர் குளம், கட்டளை வாய்க்காலில் 3 சிறு பாலங்கள் கட்டும் பணி தீவிரம் ஊரடங்கு தளர்விற்கு பின்னர் மீண்டும் வேலைகள் தொடங்கியது
x
தினத்தந்தி 6 Jun 2020 10:02 AM IST (Updated: 6 Jun 2020 10:02 AM IST)
t-max-icont-min-icon

திருச்சி அரைவட்ட சுற்றுச்சாலையின் ஒரு பகுதியாக சாத்தனூர் குளம், கட்டளை வாய்க்காலில் 3 சிறு பாலங்கள் கட்டும் பணி ஊரடங்கு தளர்விற்கு பின்னர் மீண்டும் தொடங்கி தீவிரமாக நடந்து வருகிறது.

திருச்சி, 

திருச்சி அரைவட்ட சுற்றுச்சாலையின் ஒரு பகுதியாக சாத்தனூர் குளம், கட்டளை வாய்க்காலில் 3 சிறு பாலங்கள் கட்டும் பணி ஊரடங்கு தளர்விற்கு பின்னர் மீண்டும் தொடங்கி தீவிரமாக நடந்து வருகிறது.

திருச்சி அரைவட்ட சுற்றுச்சாலை

திருச்சி-தஞ்சை தேசிய நெடுஞ்சாலையில் அசூர் என்ற இடத்தில் தொடங்கி புதுக்கோட்டை சாலையில் மாத்தூர் வழியாக திருச்சி- மதுரை தேசிய நெடுஞ்சாலையில் பஞ்சப்பூர் என்ற இடத்தில் முடிவடையும் வகையிலும், பஞ்சப்பூரில் தொடங்கி திருச்சி- திண்டுக்கல் தேசிய நெடுஞ்சாலையை தாயனூர் அருகே கடந்து திருச்சி- கரூர் தேசிய நெடுஞ்சாலையில் திண்டுக்கரை என்ற இடத்தில் முடிவடையும் வகையிலும் திருச்சி அரை வட்ட சுற்றுச்சாலை அமைக்கும் பணி கடந்த 2008-ம்ஆண்டு தொடங்கியது. ஆனால் பல்வேறு காரணங்களால் இப்பணி 10 ஆண்டுகளுக்கும் மேலாக கிடப்பில் போடப்பட்டது.

கடந்த ஆண்டு இந்த அரை வட்ட சுற்றுச்சாலையின் பணிகள் மீண்டும் தொடங்கி விறு விறுப்பாக நடந்து வந்தது. மேலும் பஞ்சப்பூருக்கும் ஓலையூருக்கும் இடைப்பட்ட பகுதியில் கட்டளை வாய்க்கால் மற்றும் சாத்தனூர் குளம் குறுக்கிடுவதால் அவற்றில் சிறு பாலங்கள் மற்றும் குறும்பாலங்கள், குழாய் பாலங்கள் கட்டி அதன் பின்னர் சாலை அமைக்கவும் திட்டமிடப்பட்டு இருந்தது.

3 சிறு பாலங்கள்

இதில் கட்டளை வாய்க்கால் மற்றும் சாத்தனூர் குளத்தில் தண்ணீர் இருந்ததால் தண்ணீர் வடிந்த பின்னர் பணிகள் தொடங்க இருந்த நிலையில் ஊரடங்கு உத்தரவால், மீண்டும் பணிகள் நிறுத்தப்பட்டது. தற்போது, கட்டுமான பணிகளுக்கு தளர்வு அளிக்கப்பட்டுள்ளதால், சாலைப்பணிகள் மீண்டும் தொடங்கப்பட்டு உள்ளது. கட்டளை வாய்க்கால், சாத்தனூர் குளத்தில் தலா 12 மீட்டர் நீளம், 10 மீட்டர் அகலத்தில் 3 சிறு பாலங்கள் கட்டும் பணி தீவிரமாக நடந்து வருகிறது.

இது தவிர வாய்க்கால் மற்றும் குளத்தின் நீராதாரம் பாதிக்காமல் இருப்பதற்காகவும், விவசாயிகளின் பாசனத்திற்கு தண்ணீர் தடையின்றி செல்வதற்காகவும் 2 குறும்பாலங்கள் கட்டும் பணியும் நடந்து வருகிறது. இது தவிர 12 இடங்களில் சாலையின் ஒரு பகுதியில் இருந்து மறு பகுதிக்கு தண்ணீர் தடையின்றி செல்வதற்காக குழாய் பாலங்கள் அமைக்கும் பணியும் நடந்து வருகிறது.

மேட்டூர் அணையில் இருந்து காவிரியில் வருகிற 12-ந்தேதி தண்ணீர் திறக்கப்பட்டால் கட்டளை வாய்க்கால் உள்ளிட்ட 17 கிளை வாய்க்கால்களில் ஆகஸ்டு மாதம் தண்ணீர் திறந்து விடப்படுவது வழக்கம். இதனால் வாய்க்காலில் தண்ணீர் வருவதற்கு முன்பே கட்டுமான பணிகளை விரைவாக முடிக்கும் வகையில் இரவு பகலாக வேலைகள் நடந்து வருகிறது.

Next Story