ஊரக புத்தாக்க திட்டத்தின் மூலம் வாழ்வாதார தொழிலை மேம்படுத்த சிறப்பு கடன் உதவி : கலெக்டர் தகவல்


ஊரக புத்தாக்க திட்டத்தின் மூலம் வாழ்வாதார தொழிலை மேம்படுத்த சிறப்பு கடன் உதவி : கலெக்டர் தகவல்
x
தினத்தந்தி 6 Jun 2020 10:12 AM IST (Updated: 6 Jun 2020 10:12 AM IST)
t-max-icont-min-icon

விழுப்புரம் மாவட்டத்தில் ஊரக புத்தாக்க திட்டத்தின் மூலம் வாழ்வாதார தொழிலை மேம்படுத்த சிறப்பு கடன் உதவி வழங்கப்படுகிறது என்று கலெக்டர் அண்ணாதுரை தெரிவித் துள்ளார். இதுகுறித்து அவர் வெளியிட்டுள்ள ஒரு செய்திக்குறிப்பில் கூறியிருப்பதாவது:-

விழுப்புரம்,

விழுப்புரம் மாவட்டத்தில் 322 ஊராட்சிகளில் தமிழ்நாடு ஊரக புத்தாக்க திட்டம் செயல்படுத்தப்பட்டு வருகிறது. இத்திட்டத்தின் மூலம் திட்ட ஊராட்சிகளில் சுய உதவிக்குழு உறுப்பினர் மற்றும் அவர்களது குடும்பங் களை சேர்ந்த வர்களால் நடத்தப்பட்டு கொரோனா வைரஸ் தொற்றினால் பாதிக்கப்பட்ட ஊரக தொழில்களை மேம்படுத்து வதற்காகவும், மாற்றுத்திறனா ளிகள் மற்றும் நலிவுற்றோரால் மேற் கொள்ளப்படும் வாழ்வா தார தொழிலை மேம்படுத்து வதற்காகவும் உழவர் உற்பத்தியாளர் குழுக்கள், உழவர் உற்பத்தியாளர் கூட்டமைப்புகளில் உள்ள உறுப்பினர்கள் தங்கள் தொழில்களின் மூலம் வளமும், வலிமையும் பெறுவதற் காகவும், பிற பகுதிகளுக்கு புலம் பெயர்ந்து மீண்டும் சொந்த ஊர் திரும்பிய இளைஞர்களுக்கு புதிதாக தொழில் தொடங்கவும் அரசு வழிவகை செய்துள்ளது.

இதற்காக ரூ.300 கோடியில் கொரோனா சிறப்பு நிதி உதவி தொகுப்பு திட்டம் அரசால் தொடங்கி வைக்கப்பட்டது. இதன் மூலம் விழுப்புரம் மாவட்டத்தில் ரூ.20 கோடியே 98 லட்சம் மதிப்பில் 5,463 பேர் பயன்பெற கூடிய வகையில் கொரோனா சிறப்பு நிதி உதவித்தொகுப்பு செயல்படுத்தப்பட உள்ளது.

இத்திட்டத்தின் மூலம் 2,576 பேருக்கு, நபர் ஒருவருக்கு அதிகபட்சமாக ரூ.50 ஆயிரம் என்ற அடிப்படையில் மொத்தம் ரூ.12 கோடியே 88 லட்சம், நீண்ட கால தனிநபர் தொழில் கடனாக ஊராட்சி அளவிலான கூட்டமைப்புகள் மூலம் வழங்கப்படும். 129 உற்பத்தியாளர் குழுக்களில் உள்ள 12,900 பேர் பயன்பெறும் வகையில் ஒருமுறை மூலதன மானியமாக குழு ஒன்றுக்கு ரூ.1 லட்சத்து 50 ஆயிரம் வீதம் வழங்கப்படும்.

மேலும் குழு ஒன்றுக்கு 5 பேர் அடங்கிய 12 தொழில் குழுக்களுக்கு (ஆடை தயாரிப்பு, பால் பொருட்கள் உற்பத்தி, கலைப்பொருட்கள் உற்பத்தி போன்றவை) தலா ரூ.1 லட்சத்து 50 ஆயிரம் வீதம் ரூ.18 லட்சம் ஒருமுறை மூலதன மானியமாக வழங்கப்படும். புலம் பெயர்ந்து மீண்டும் சொந்த ஊர் திரும்பி வந்த திறன் பெற்றவர்களில் வேலையில்லாத இளைஞர் களுக்கு தொழில் தொடங்கு வதற்காக கிராம வறுமை ஒழிப்பு சங்கங்கள் மூலம் தலா ரூ.1 லட்சம் ரூபாய் வீதம் மொத்தம் ரூ.1 கோடியே 67 லட்சம், நீண்ட கால கடனாக வழங்கப்படும்.

அதேபோல் ஒரு உற்பத்தியாளர் கூட்டமைப் பிற்கு, உழவர் உற்பத்தியாளர் நிறுவனத்திற்கு 1,000 பேர் வீதம் பயனாளிகள் பயன்பெறும் வகையில் ஒரு உற்பத்தியாளர் கூட்டமைப் பிற்கு தலா ரூ.10 லட்சம் என 3 உற்பத்தியாளர் கூட்டமைப் பிற்கு ரூ.30 லட்சம் மூலதன மானியமாக வழங்கப்படும். மாற்றுத்திறனாளிகள், விதவை கள், திருநங்கைகள், ஆதரவற் றோர் உள்ளிட்ட நலிவுற்றோ ரின் தொழில் மேம்பாட்டிற்காக பயனாளிகளை தேர்ந்தெடுத்து தொழில் மூலதன நிதியாக கிராம வறுமை ஒழிப்பு சங்கங்கள் மூலம் தனிநபர் ஒருவருக்கு அதிகபட்சமாக ரூ.20 ஆயிரம் என்ற அடிப்படையில் நிதி வழங்குவதற்காக மொத்தம் ரூ.4 கோடியே 1 லட்சம், நீண்ட கால கடனாக வழங்கப் படும்.

மேற்கண்ட பயன்களை பெற விரும்புவோர் விக்கிர வாண்டி, கோலியனூர், முகையூர், காணை, திருவெண்ணெய்நல்லூர், வல்லம் ஆகிய ஒன்றியங்களுக்குட்பட்ட ஊராட்சிகளில் செயல்பட்டு வரும் ஊராட்சி அளவிலான கூட்டமைப்புகள், கிராம வறுமை ஒழிப்பு சங்கங்கள் மற்றும் விழுப்புரம் சுதாகர் நகரில் செயல்பட்டு வரும் தமிழ்நாடு ஊரக புத்தாக்க திட்ட அலுவலகத்தை தொடர்பு கொள்ளலாம். இவ்வாறு அந்த செய்திக் குறிப்பில் கூறப்பட்டுள்ளது.

Next Story