கடலூர் மாவட்டத்தில் பெண் உள்பட 3 பேருக்கு கொரோனா
கடலூர் மாவட்டத்தில் பெண் உள்பட 3 பேருக்கு கொரோனா உறுதி செய்யப்பட்டது.
கடலூர்,
கடலூர் மாவட்டத்தில் கொரோனா பரவாமல் தடுக்க பல்வேறு முன்னெச்சரிக்கை நடவடிக்கைகள் எடுக்கப்பட்டு வருகிறது. இருப்பினும் வெளிமாநிலம், வெளிமாவட்டங்களில் இருந்து கடலூர் மாவட்டத்திற்கு திரும்பியவர்களால் பாதிப்பு எண்ணிக்கை நாளுக்கு நாள் அதிகரித்து வருகிறது. நேற்று முன்தினம் வரை 475 பேர் பாதிக்கப்பட்டு இருந்தனர். 2 பேர் சிகிச்சை பலனின்றி உயிரிழந்தனர்.
இந்நிலையில் நேற்று 138 பேரின் பரிசோதனை முடிவுகள் வந்தது. இதில் 3 பேருக்கு கொரோனா உறுதி செய்யப்பட்டது. அதாவது விருத்தாசலத்தை சேர்ந்த 25 வயது பெண்ணுக்கு கொரோனா உறுதி செய்யப்பட்டது. இவருக்கு குழந்தை பிறந்து 5 நாட்களே ஆகிறது. இதனால் அவரது குழந்தைக்கும் பாதிப்பு உள்ளதா? என்று சுகாதாரத்துறையினர் பரிசோதனை செய்துள்ளனர்.
இதுதவிர குறிஞ்சிப்பாடியை சேர்ந்த 51 வயது நபருக்கும், மருங்கூரை சேர்ந்த 38 வயது நபருக்கும் கொரோனா உறுதியாகி உள்ளது. இதையடுத்து 25 வயது பெண்ணும், 51 வயது ஆணும் சிதம்பரம் ராஜா முத்தையா மருத்துவக்கல்லூரி மருத்துவமனையிலும், 38 வயது நபர் புதுச்சேரி ஜிப்மர் மருத்துவமனையிலும் அனுமதிக்கப்பட்டு சிகிச்சை பெற்று வருகின்றனர்.
இதன் மூலம் மாவட்டத்தில் பாதிக்கப்பட்டவர்களின் எண்ணிக்கை 478 ஆக உயர்ந்தது. ஆனால் சென்னையில் வேலை பார்த்து வந்த கடலூர் வண்டிப்பாளையத்தை சேர்ந்த போலீஸ்காரர், அவரது மனைவி, 2 குழந்தைகளுக்கு பாதிப்பு உறுதி செய்யப்பட்ட நிலையில், அவர்கள் 4 பேரும் சென்னை புள்ளி விவர பட்டியலில் சேர்க்கப்பட்டனர்.
இதனால் கடலூர் மாவட்டத்தில் பாதிப்பு எண்ணிக்கை 474 ஆக குறைக்கப்பட்டுள்ளது. இவர்களில் 436 பேர் குணமடைந்து, அவரவர் வீடுகளுக்கு திரும்பினர். நேற்று ஒருவர் குணமடைந்து வீட்டுக்கு அனுப்பி வைக்கப்பட்டார். இவர்களை தவிர ஏற்கனவே சென்னை, அரியலூரை சேர்ந்த 3 பேர் குணமடைந்து அவரவர் வீடுகளுக்கு அனுப்பி வைக்கப்பட்டனர். மொத்தம் 440 பேர் குணமடைந்து வீடு திரும்பி உள்ளனர்.

Related Tags :
Next Story