1,899 பேருக்கு ரூ.6 கோடி கொரோனா சிறப்பு நிதி உதவி ; கலெக்டர் கதிரவன் தகவல்


1,899 பேருக்கு ரூ.6 கோடி கொரோனா சிறப்பு நிதி உதவி ; கலெக்டர் கதிரவன் தகவல்
x
தினத்தந்தி 6 Jun 2020 11:22 AM IST (Updated: 6 Jun 2020 11:22 AM IST)
t-max-icont-min-icon

ஈரோடு மாவட்டத்தில் 1,899 பேருக்கு ரூ.6½ கோடி கொரோனா சிறப்பு நிதி உதவி வழங்கப்படும் என்று கலெக்டர் சி.கதிரவன் தெரிவித்து உள்ளார்.

ஈரோடு,

தமிழ்நாடு ஊரக புத்தாக்க திட்டம் சார்பில் கடன் மற்றும் மானிய நிதி வழங்குவது குறித்த அனைத்துத்துறை அதிகாரிகளுடனான ஆலோசனை கூட்டம் ஈரோடு மாவட்ட கலெக்டர் அலுவலகத்தில் நடைபெற்றது. கூட்டத்துக்கு மாவட்ட கலெக்டர் சி.கதிரவன் தலைமை தாங்கி பேசினார். அப்போது அவர் கூறியதாவது:-

தமிழ்நாடு அரசின் ஊரக வளர்ச்சி மற்றும் ஊராட்சி துறையின் கீழ் செயல்படும் தமிழ்நாடு ஊரக புத்தாக்க திட்டமானது ஈரோடு மாவட்டத்தில் பவானி, பவானிசாகர், சென்னிமலை, தாளவாடி, சத்தியமங்கலம் ஆகிய 5 தாலுகாக்களில் செயல்படுத்தப்பட்டு வருகிறது. இதன் மூலம் ஊரக தொழில்களை மேம்படுத்துதல், வேலை வாய்ப்பு மற்றும் நிதி சேவைகளுக்கு வழிவகுத்தல், வருமானத்தை பெருக்குதல் போன்றவற்றை அடிப்படையாக கொண்டு செயல்படுத்தப்பட்டு வருகிறது.

சுய உதவிக்குழு உறுப்பினர் மற்றும் உறுப்பினர் குடும்பங்களை சார்ந்தவர்களால் நடத்தப்பட்டு, கொரோனா வைரஸ் தொற்றினால் பாதிக்கப்பட்ட ஊரக தொழில்களை மேம்படுத்துவதற்காக ரூ.300 கோடியில் கொரோனா சிறப்பு நிதி உதவி தொகுப்பு திட்டத்தை முதல்-அமைச்சர் தொடங்கி வைத்து உள்ளார். இந்த சிறப்பு நிதி உதவி தொகுப்பின் மூலம் ஈரோடு மாவட்டத்தில் ரூ.6 கோடியே 50 லட்சம் மதிப்பில் 1,899 பேர் பயன்பெறக்கூடிய வகையில் கொரோனா சிறப்பு நிதி உதவி தொகுப்பு செயல்படுத்தப்பட உள்ளது.

இவ்வாறு மாவட்ட கலெக்டர் சி.கதிரவன் தெரிவித்து உள்ளார்.

இந்த கூட்டத்தில் மாவட்ட ஊரக வளர்ச்சி முகமை திட்ட இயக்குனர் பாலகணேஷ் உள்பட பலர் கலந்துகொண்டனர்.

Next Story