நீதிமன்ற பணியாளர்களுக்கு கபசுர குடிநீர் வழங்கல்
குற்றவியல் நடுவர் நீதிமன்ற பணியாளர்களுக்கு கொரோனா நோய் தடுப்பிற்காக கபசுர குடிநீர் வழங்குதல், நோய் தொற்று பாதுகாப்பு மற்றும் விழிப்புணர்வு முகாம் நடந்தது.
வேப்பந்தட்டை,
பெரம்பலூர் மாவட்ட முதன்மை அமர்வு நீதிபதியும், மாவட்ட சட்டப்பணிகள் ஆணைக்குழுவின் தலைவருமான சுபாதேவி வழிக்காட்டுதலின் பேரில், வேப்பந்தட்டை நீதிமன்றத்தில் உரிமையியல் மற்றும் குற்றவியல் நடுவர் நீதிமன்ற பணியாளர்களுக்கு கொரோனா நோய் தடுப்பிற்காக கபசுர குடிநீர் வழங்குதல், நோய் தொற்று பாதுகாப்பு மற்றும் விழிப்புணர்வு முகாம் நடந்தது.
இதற்கு பெரம்பலூர் மாவட்ட நிரந்தர மக்கள் நீதிமன்ற தலைவரும், மாவட்ட நீதிபதியுமான கருணாநிதி தலைமை தாங்கினார். மாவட்ட சட்டப்பணிகள் ஆணைக்குழுவின் செயலாளர் வினோதா, நீதித்துறை நடுவர் செந்தில்ராஜா ஆகியோர் முன்னிலை வகித்தனர்.
முகாமில் சித்த மருத்துவர் விஜயன், ஓமியோபதி மருத்துவர் ராகுல்ஜி, யோகா மற்றும் இயற்கை மருத்துவர் கலைவாணி ஆகியோர் சித்த மருத்துவம் மற்றும் இயற்கை மருத்துவத்தின் முக்கியத்துவம், கபசுர குடிநீரின் செயல்பாடுகள் பற்றி விரிவாக எடுத்துரைத்தனர். நிரந்தர மக்கள் நீதிமன்றத்தின் தலைவர் கருணாநிதி நீதிமன்ற பணியாளர்களுக்கு கபசுர குடிநீர் வழங்கி, பணியாளர்கள் மற்றும் குடும்ப உறுப்பினர்கள் தங்களை கொரோனா வைரஸ் தொற்றில் இருந்து பாதுகாத்திட முக கவசம் அணிவதோடு, சமூக இடைவெளியை கடைபிடிக்க வேண்டும் என்றார். முகாமிற்கான ஏற்பாடுகளை மாவட்ட சட்டப்பணிகள் ஆணைக்குழு பணியாளர்கள் மற்றும் சமூக சட்ட ஆர்வலர்கள் செய்திருந்தனர்.
Related Tags :
Next Story