மாவட்ட செய்திகள்

ஜெயங்கொண்டம், கயர்லாபாத் பகுதிகளில்இன்று மின்சாரம் நிறுத்தம் + "||" + In the areas of Jayankondam and Kearlabad Power outage today

ஜெயங்கொண்டம், கயர்லாபாத் பகுதிகளில்இன்று மின்சாரம் நிறுத்தம்

ஜெயங்கொண்டம், கயர்லாபாத் பகுதிகளில்இன்று மின்சாரம் நிறுத்தம்
ஜெயங்கொண்டம், கயர்லாபாத் பகுதிகளில் இன்று (சனிக்கிழமை) மின்சாரம் நிறுத்தம் செய்யப்படுகிறது.
ஜெயங்கொண்டம்,

ஜெயங்கொண்டம், கயர்லாபாத் பகுதிகளில் இன்று (சனிக்கிழமை) மின்சாரம் நிறுத்தம் செய்யப்படுகிறது.

மின் நிறுத்தம்

ஜெயங்கொண்டம் மின்வாரிய உதவி செயற்பொறியாளர் சாமிதுரை ஒரு அறிக்கை வெளியிட்டுள்ளார். அதில் அவர் கூறியிருப்பதாவது:-

ஜெயங்கொண்டம், தா.பழூர் ஆகிய துணை மின் நிலையங்களில் இன்று (சனிக்கிழமை) பராமரிப்பு பணிகள் நடைபெற இருப்பதால் இந்த துணை மின் நிலையங்களில் இருந்து மின்சாரம் வினியோகம் பெறும் பகுதிகளான ஜெயங்கொண்டம், கல்லாத்தூர், உட்கோட்டை, வாரியங்காவல், தா.பழூர், சிலால், வாணதிரையன்பட்டினம், இருகையூர், கோடாலிகருப்பூர், உதயநத்தம், அணைக்குடம், சோழமாதேவி, தென்கச்சிப்பெருமாள்நத்தம், நாயகனைப்பிரியாள், பொற்பதிந்தநல்லூர், இடங்கண்ணி, கோடங்குடி, அருள்மொழி, வாழைக்குறிச்சி, காரைக்குறிச்சி ஆகிய பகுதிகளில் இன்று காலை 9 மணி முதல் பராமரிப்பு பணிகள் முடியும் வரை மின்சாரம் வினியோகம் இருக்காது.

இவ்வாறு அவர் அதில் கூறியுள்ளார்.

பணிகள் முடியும் வரை...

இதேபோல் தமிழ்நாடு மின்சார வாரியத்தின் அரியலூர் உதவி செயற்பொறியாளர் சுப்ரமணியன் வெளியிட்டுள்ள ஒரு செய்திக்குறிப்பில் கூறியிருப்பதாவது:-

அரியலூர் துணை மின் நிலையத்தில் இன்று (சனிக்கிழமை) பராமரிப்பு பணிகள் நடக்கிறது. எனவே இங்கிருந்து மின்சாரம் வினியோகம் பெறும் அரியலூரில் ஒரு சில பகுதிகள், கயர்லாபாத், ராஜீவ்நகர், லிங்கத்தடிமேடு, வாலாஜநகரம், வெங்கடகிருஷ்ணாபுரம், அஸ்தினாபுரம், காட்டுப்பிரிங்கியம், பெரியநாகலூர், மண்ணுழி, புதுப்பாளையம், குறிச்சி நத்தம், சிறுவளூர், ஜெமீன் ஆத்தூர், ரசுலாபாத், பாலம்பாடி, பார்ப்பனச்சேரி, தவுத்தாய்குளம், மல்லூர், வாரணவாசி, கிருஷ்ணாபுரம், ரெங்கசமுத்திரம், அம்மாகுளம், கல்லங்குறிச்சி, மணக்குடி, கடுகூர், கோப்பிலியன்குடிக்காடு, அயன்ஆத்தூர், ஆனந்தவாடி, சீனிவாசபுரம், பொய்யாதநல்லூர், கொளப்பாடி, ஓட்டக்கோவில், கோவிந்தபுரம், மங்களம், தாமரைக்குளம், குறுமஞ்சாவடி ஆகிய பகுதிகளில் இன்று காலை 9 மணி முதல் பராமரிப்பு பணிகள் முடியும் வரை மின்சாரம் இருக்காது.

இவ்வாறு அவர் அதில் கூறியுள்ளார்.

தொடர்புடைய செய்திகள்

1. ஜெயங்கொண்டம், தா.பழூரில் ஊராட்சி செயலாளர்கள் தற்செயல் விடுப்பு எடுத்து ஆர்ப்பாட்டம்
ஜெயங்கொண்டம், தா.பழூரில் ஊராட்சி செயலாளர்கள் தற்செயல் விடுப்பு எடுத்து, கவன ஈர்ப்பு ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர்.