மும்பை, தானேயில் பலத்த மழை
மும்பை, தானேயில் நேற்று பலத்த மழை பெய்தது.
மும்பை,
மும்பையில் ஜூன் 11-ந் தேதி தான் மழைக்காலம் தொடங்கும் என வானிலை ஆய்வு மையம் அறிவித்து இருந்தது.
இந்தநிலையில் நிசர்கா புயல் காரணமாக கடந்த புதன், வியாழக்கிழமைகளில் மும்பை, தானே மற்றும் அருகில் உள்ள பகுதிகளில் மழை பெய்தது. இந்தநிலையில் நேற்றும் மும்பை, தானே உள்ளிட்ட பகுதிகளில் பலத்த மழை பெய்து உள்ளது. நேற்று காலை சுமார் 6 மணியளவில் பெய்த மழை ½ மணி நேரத்துக்கு மேல் வெளுத்து வாங்கியது.
வானிலை ஆய்வு மையம் வெளியிட்டுள்ள தகவலின்படி நேற்று காலை 8.30 மணி வரை மும்பையில் 24 மணி நேரத்தில் நகர் பகுதியில் 18.6 மி.மீ. மழையும், புறநகர் பகுதியில் 64.9 மி.மீ. மழையும் பெய்து உள்ளது. மும்பை தவிர தானே, டோம்பிவிலி பகுதியிலும் பலத்த மழை பெய்ததாக வானிலை ஆய்வு மைய அதிகாரி ஒருவர் கூறினார்.
தானேயில் மழை காரணமாக ஒரு சில பகுதிகளில் தாழ்வான இடங்களில் மழைநீர் தேங்கியது. தானே காந்திநகர் பகுதியில் ஒரு வீட்டின் பக்கவாட்டு சுவர் இடிந்து விழுந்தது. அதிர்ஷ்டவசமாக யாருக்கும் இதில் காயம் எதுவும் ஏற்படவில்லை.

Related Tags :
Next Story