கொரோனா சிகிச்சையில் அலட்சியமாக செயல்படும்; தனியார் மருத்துவமனைகள் மீது கடும் நடவடிக்கை - துணை முதல்-மந்திரி அஜித்பவார் எச்சரிக்கை


கொரோனா சிகிச்சையில் அலட்சியமாக செயல்படும்; தனியார் மருத்துவமனைகள் மீது கடும் நடவடிக்கை - துணை முதல்-மந்திரி அஜித்பவார் எச்சரிக்கை
x
தினத்தந்தி 7 Jun 2020 6:34 AM IST (Updated: 7 Jun 2020 6:34 AM IST)
t-max-icont-min-icon

கொரோனா நோயாளிகளுக்கு சிகிச்சை அளிப்பதில் அலட்சியமாக செயல்படும் தனியார் ஆஸ்பத்திரிகள் மீது கடும் நடவடிக்கை எடுக்கப்படும் என துணை முதல்-மந்திரி அஜித்பவார் எச்சரித்துள்ளார்.

மும்பை,

மராட்டியத்தில் கொரோனாவால் பாதிக்கப்பட்டவர்களின் எண்ணிக்கை 80 ஆயிரத்தை கடந்துள்ளது. கொரோனா உயிரிழப்பு எண்ணிக்கை 3 ஆயிரத்தை நெருங்கி கொண்டு இருக்கிறது. இந்தநிலையில், கொரோனா நிலைமை தொடர்பாக துணை முதல்-மந்திரி அஜித்பவார் அரசு அதிகாரிகளுடன் நேற்று ஆலோசனை நடத்தினார். அப்போது அஜித்பவார் பேசியதாவது:-

கொரோனாவால் பாதிக்கப்பட்ட நோயாளிகளுக்கு சிகிச்சை அளிப்பதில் தனியார் மருத்துவமனைகள் அலட்சியம் காட்டுவது ஒரு தீவிரமான பிரச்சினை ஆகும்.

கொரோனா சிகிச்சையில் அலட்சியமாக செயல்படும் ஆஸ்பத்திரிகள் மீது கடும் நடவடிக்கை எடுக்கப்படும். கொரோனா வைரசில் இருந்து மாணவர்களை பாதுகாக்க பள்ளிகள் திறப்பது தொடர்பாக போதுமான முன்னெச்சரிக்கை நடவடிக்கைகளும் விரைவில் எடுக்கப்படும். பொருளாதாரம் மீட்கப்பட வேண்டும். இவ்வாறு அவர் கூறினார்.

Next Story