கொடைக்கானல் மலைப்பாதையில் கார் பள்ளத்துக்குள் பாய்ந்து விபத்து வங்கி அதிகாரி உள்பட 4 பேர் படுகாயம்
பழனி திருநகர் பகுதியை சேர்ந்தவர் விவேக்சர்மா (வயது 28). இவர் பழனியில் உள்ள தனியார் வங்கியில் அதிகாரியாக வேலை செய்து வருகிறார்.
பழனி,
பழனி திருநகர் பகுதியை சேர்ந்தவர் விவேக்சர்மா (வயது 28). இவர் பழனியில் உள்ள தனியார் வங்கியில் அதிகாரியாக வேலை செய்து வருகிறார்.
இவர் நேற்று தனது தாய் வேளாங்கண்ணி (48), அக்காள் விக்டோரியா (29) மற்றும் அவரது கணவர் குமரேசன் (34) ஆகியோருடன் காரில் கொடைக்கானல் நோக்கி சென்று கொண்டிருந்தார். காரை விவேக்சர்மா ஓட்டினார். இவர்கள் சென்ற கார் பழனி-கொடைக்கானல் மலைப்பாதையில் 1-வது கொண்டை ஊசி வளைவில் சென்றபோது, திடீரென்று கட்டுப்பாட்டை இழந்து சாலையோர பள்ளத்தில் பாய்ந்தது.
இதை அந்த வழியாக சென்றவர்கள் பார்த்து உடனடியாக பழனி தாலுகா போலீசுக்கு தகவல் கொடுத்தனர். அதன்பேரில் சம்பவ இடத்திற்கு வந்த போலீசார், காரில் இருந்தவர்களை மீட்டனர். மேலும் கிரேன் எந்திரம் வரவழைக்கப்பட்டு காரும் மீட்கப்பட்டது.
இந்த விபத்தில் காரில் சென்றவர்கள் அனைவரும் காயத்துடன் அதிர்ஷ்டவசமாக உயிர் தப்பினர். காயமடைந்தவர்களை பழனி அரசு மருத்துவமனையில் சிகிச்சைக்காக போலீசார் சேர்த்தனர். இதுகுறித்து போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.
Related Tags :
Next Story