மாவட்ட எல்லையில் தொடரும் பாதுகாப்பு பணிகள் விசாரணைக்கு பின்னரே வாகனங்கள் அனுமதி
ஈரோடு மாவட்ட எல்லையில் பாதுகாப்பு பணிகள் தொடர்ந்து நடைபெற்று வருகின்றன. வாகனங்கள் அனைத்தும் போலீசாரின் விசாரணைக்கு பின்னரே அனுமதிக்கப்படுகின்றன.
ஈரோடு,
ஈரோடு மாவட்ட எல்லையில் பாதுகாப்பு பணிகள் தொடர்ந்து நடைபெற்று வருகின்றன. வாகனங்கள் அனைத்தும் போலீசாரின் விசாரணைக்கு பின்னரே அனுமதிக்கப்படுகின்றன.
பாதுகாப்பு
ஈரோடு மாவட்டத்தில் கொரோனா தொற்று பரவலை தடுக்க தீவிர நடவடிக்கை எடுக்கப்பட்டு உள்ளது. ஈரோடு மாவட்ட கலெக்டர் சி.கதிரவன் உத்தரவின் பேரில் மாவட்ட போலீஸ் சூப்பிரண்டு எஸ்.சக்திகணேசன், மாவட்ட வருவாய் அதிகாரி ச.கவிதா, மாவட்ட ஊரக வளர்ச்சி முகமை திட்ட இயக்குனர் மு.பாலகணேஷ், சுகாதாரப்பணிகள் துணை இயக்குனர் டாக்டர் சவுண்டம்மாள், மாநகராட்சி ஆணையாளர் எம்.இளங்கோவன் உள்ளிட்ட அதிகாரிகள் கொரோனா ஒழிப்பு நடவடிக்கைகளில் தீவிரமாக ஈடுபட்டு உள்ளனர்.
தற்போது ஈரோடு மாவட்டத்தில் கொரோனா பாதித்தவர்களின் எண்ணிக்கை 72 ஆக உள்ளது. தற்போது ஒருவர் மட்டுமே சிகிச்சையில் இருந்து வருகிறார். எனவே மேலும் ஈரோடு மாவட்டத்தில் யாருக்கும் கொரோனா தொற்று ஏற்பட்டு விடக்கூடாது என கண்காணிப்பு மற்றும் பாதுகாப்பு தீவிரப்படுத்தப்பட்டு உள்ளது.
12 ஆயிரம் பேர்...
குறிப்பாக மாவட்ட எல்லைப்பகுதிகளில் உள்ள சோதனைச்சாவடிகளில் அனைத்து வாகனங்களும் போலீசாரின் தீவிர விசாரணைக்கு பின்னரே அனுமதிக்கப்படுகின்றன. இதுபோல் சென்னை மற்றும், பிற மாநிலங்களில் இருந்து வருபவர்கள் உடனடியாக கொரோனா தொற்று பரிசோதனைக்கு உட்படுத்தப்பட்டு வருகிறார்கள்.
மேலும், சென்னை மற்றும் பிற மாநிலங்களில் இருந்து வருபவர்களை 14 நாட்கள் அவரவர் வீடுகளிலேயே தனிமைப்படுத்தி வைக்கப்படுகிறார்கள். இந்த நடவடிக்கைகளுக்கு பொதுமக்கள் ஆதரவு அளிக்க வேண்டும். கொரோனா தொற்று இல்லாத மாவட்டமாக ஈரோடு திகழ அனைவரும் இணைந்து செயல்பட வேண்டும் என்று அதிகாரிகள் கேட்டுக்கொண்டு உள்ளனர். இதுவரை ஈரோடு மாவட்டத்தை சேர்ந்த 12 ஆயிரத்துக்கும் மேற்பட்டவர்களுக்கு பெருந்துறை அரசு மருத்துவ கல்லூரி மருத்துவமனையில் கொரோனா பரிசோதனை செய்யப்பட்டு உள்ளதாக சுகாதாரத்துறை அதிகாரிகள் தெரிவித்தனர்.
Related Tags :
Next Story